Friday, May 10, 2019

"பெண்கள் சமுதாயமே..! தானதர்மங்கள் செய்யுங்கள்;

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உரையாற்றுகையில்)

"பெண்கள் சமுதாயமே..! 
தானதர்மங்கள் செய்யுங்கள்; அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் கண்டேன்" என்று கூறினார்கள். 
அப்போது அங்கிருந்த புத்திசாலியான ஒரு பெண்மணி, 
"நரகவாசிகளில் அதிக பேராக நாங்கள் இருப்பதற்கு என்ன காரணம்..?  அல்லாஹ்வின் தூதரே..!" என்று கேட்டார். 

Wednesday, May 8, 2019

நோன்பு கஞ்சி உருவான தகவல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பல ஆயிரம் வருடங்களாக இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் 30 நாட்கள் உண்னா நோன்பு இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
நோன்பு மாதம் என்றவுடன் கட்டாயம் நோன்பு கஞ்சி அனைவரையும் நினைவுப்படுத்தும். இன்று உலகெங்கிலும் நோன்பு கஞ்சியை பற்றி தெரிந்திருந்தாலும், அதை முதலில் காய்ச்சியது கடையநல்லூரை சேர்ந்த முஹம்மது அலி என்ற தமிழர்..
இன்று மியான்மர் என அழைக்கப்படும் பர்மாவில் அன்றுஉணவகம் வைத்திருந்தவர் முஹம்மது அலி. அன்றைய மியான்மரில் உண்ணா நோன்பு பூர்த்தி செய்யும் நேரத்தில் அரிசியால் ஆன கஞ்சியையும், வெங்காயத்தையும் கடித்து முடித்துக் கொண்டனர்.