Friday, June 15, 2018

🌼 *"பிறை பார்ப்பது எப்படி?"*🌼

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!

*O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்களுக்கான பயான் குறிப்புத் தளம்
🌹🌹 *தலைப்பு:-*

*"சர்வதேச பிறையை கணிப்பீடு செய்து நோன்பு பிடிப்பவர்களே!"*
உலகத்தில் ஒரே ஒரு சந்திரன் தான் உள்ளது.எனவே உலகில் எங்காவது அது பிறந்து விட்டால் முழு உலகுக்கும் அது பிறந்து விட்டதாகத் தான் பொருள். எனவே சவூதியில் பிறை பார்த்து, அல்லது விஞ்ஞான அடிப்படையில் கணித்து, இன்று தலைப்பிறை என்று அறிவித்தால் அதை உலகமே ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உலகமெல்லாம் ஒரே சந்திரன் என்பது அடிபட்டுப் போய் விடும் என்று சிலர் வாதிடுகின்றனர்.

லைலத்துல் கத்ரு இரவு கூலி

                               அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!

லைலத்துல் கத்ரு இரவு வந்து விட்டால் ஹஜ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், மலக்குகளில் ஒரு கூட்டத்தாருடன் (பூமிக்கு) வருகை தருகின்றனர். நின்றவர்களாக, உட்கார்ந்தவர்களாக, வணக்கங்களில் ஈடுபட்டு அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டிருக்கும் அடியார்கள் அனைவருக்காகவும் அருள் வேண்டி (பாவமன்னிப்புக் கேட்டு) துஆச் செய்கின்றனர். பிறகு ஈதுல் ஃபித்ரு-நாளில் அல்லாஹு தஆலா அந்த மலக்களுக்கு முன்னிலையில் (அடியார்களின் வணக்கங்களைப் பற்றிப்) பெருமை பாராட்டிப் பேசுகிறான். (ஏனெனில், அந்த மலக்குகள் மனிதர்களைப் பற்றிக் குறை கூறியிருந்தார்கள்.

Thursday, June 14, 2018

தொழுகை

                                 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
ஒரு முறை திருநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தொழுகையைப் பற்றிக் கூறும்போது தொழுகையைப் பேணுதலாகத் தொழுதுவருபவருக்கு அது கியாமத்
நாளில் ஒளியாகவும், (விசாரணையின் போது) ஆதாரமாகவும், ஈடேற்றமாகவும் ஆகிவிடும். 
அதைப் பேணுதலாகத் தொழாதவர்களுக்கு அது கியாமத் நாளில் ஒளியாகவோ, (விசாரணையின் போது), ஆதாரமாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. மேலும்,
தொழுகையை விட்டவர் கியாமத் நாளில் ஃபிர்அவ்ன், ஹாமான் மற்றும் உபை இப்னு கலப் ஆகிய (கொடியவர்களுடன் இருப்பார் என்று கூறினார்கள்.
அறிவித்தவர்: ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ருரலியல்லாஹு அன்ஹு
நூல்: அஹ்மது
நன்றி : நபி வழி நடந்தால் நரகமில்லை