Saturday, January 3, 2015

காளான் வளர்ப்பு ..

சைவ பிரியர்களுக்கு மட்டுமல்ல, இப்போ தெல்லாம் அசைவ பிரியர்களுக்கும் பிடித்த உணவாகிவிட்டது காளான். நாக்கிற்கு நல்ல சுவை, உடலுக்கு நல்ல சத்து தரும் உணவாக இருக்கும் இதில், வைட்டமின் சி மற்றும் டி அதிகளவிலும் மற்றும் தாது வகைகளான இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பேட், காப்பர் மற்றும் பொட்டாசியம் சத்துகளும் இருக்கின்றன. பல்வேறு சத்துக்களும் சரியான விகிதத்தில் இதில் கலந்திருப்பதால் ஒரு பர்ஃபெக்ட்டான சரிவிகித உணவாகவும் சிபாரிசு செய்கிறார்கள் டயட்டீஸியன்கள்.

அலங்கார மீன் வளர்க்க மத்திய அரசு தரும் வாய்ப்புகள்

அலங்கார மீன் வளர்க்க மத்திய அரசு தரும் வாய்ப்புகள்
மீன் வளர்க்கவும், மீன் பிடிக்கவும், பதப்படுத்தி ஏற்றுமதி செய்யவும், பயிற்சி, கடனுதவி, மானியம் வழங்கி வந்த இந்திய அரசின் ""கடல் பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்'' இன்று அலங்கார மீன் வளர்க்கவும் மார்க்கெட் செய்யவும் ஏராளமான உதவிகள் செய்து வருகிறது.

Friday, January 2, 2015

ஹதீஸ்-தர்மம்

”ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்ற போது முற்கிளையைக் கண்டு அதை எடுத்து அகற்றிப் போட்டார். அவரின் இந்த நல்ல செயலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)                                                                         நூல்: புகாரி 2472
தொல்லை தரும் பொருளை அகற்றிப் போடுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)                                                                           நூல்: புகாரி 246

ஹதீஸ்-மகத்தான நாள்....!!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு........
இந்நாளை இனிய நாளாக மலரச் செய்த அல்லாஹுக்கே புகழ் அனைத்தும்
இன்றைய தினம் ஜூம்ஆ உடைய தினம் முஸ்லிம்களுக்கு இன்று பெருநாள்.
இன்றைய தினத்தை மலர செய்த அல்லாஹ்க்கே எல்லா புகழும்.

யூ ஏ இ இந்திய தூதரக வெப்சைட்டில் தமிழில் அமீரக வாழ் தமிழர்களுக்கான வழிகாட்டி

யூ ஏ இ இந்திய தூதரகம் சார்பில் www.uaeindians.org என்ற வலைதளம் உள்ளது. அதில் அமீரக வாழ் இந்தியர்களுக்கான பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

Thursday, January 1, 2015

இயற்கை முறை உணவகம்

ஆரோக்கியமான இயற்கை முறை உணவகம் தொழில் பற்றிய விவரங்களை பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் நல்ல வருமானம் மற்றும் வரவேற்பை கொண்ட துறைகளில் உணவகம் முக்கிய இடம் வகிக்கிறது. அதேசமயம் போட்டிகள் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை போன்ற சவால்கள் உள்ளது. ஆரோக்கியமான இயற்கை முறை பாரம்பரிய உணவகங்களை மிகுந்த கவனம், உழைப்பு மற்றும் நேர்த்தியுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.

விண்டோஸை வேகப்படுத்த சில வழிகள்

விண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7, 8, 10 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், சிறிது கூடக் குறையக் கூடாது என்பதுதான் நம்விருப்பமாக எந்தக் காலத்திலும் உள்ளது.

ஹதீஸ்-வியாபாரத்தின் போது ஏமாற்றுதல்

ஸஹீஹுல் புகாரி 2117.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரத்தின்போது ஏமாற்றப்படுவதாகக் கூறினார்; அதற்கு நபி(ஸல்) அவர்கள். 'நீர் எதையேனும் விற்றால் அல்லது வாங்கினால் 'ஏமாற்றுதல் இருக்கக் கூடாது!" என்று கூறிவிடுவீராக! (ஏமாற்றியது தெரியவந்தால் உமக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையுண்டு!)" என்றார்கள்.

ஹதீஸ்-தர்மம்

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். 
தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும். தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்...?' எனக் கேட்டனர். அதற்கு நபி(ஸல்), 'ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்" என்றனர். தோழர்கள், 'அதுவும் முடியவில்லையாயின்' எனக் கேட்டதற்கு, 'தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்" என்று பதிலளித்தார்கள். தோழர்கள், 'அதுவும் இயலாவில்லையாயின்" என்றதும் 'நற்காரியத்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்!" எனக் கூறினார்கள். ஸஹீஹுல் புகாரி .1445.

ஹதீஸ்-பாங்கு

ஸஹீஹுல் புகாரி 1222.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:.
பாங்கு சொல்லப்பட்டதும் பாங்கைக் கேட்கக் கூடாது என்பதற்காக ஷைத்தான் காற்றுவிட்டவனாக ஓடுகிறான். பாங்கு முடிந்ததும் முன்னே வருகிறான். இகாமத் சொல்லப்பட்டதும் திரும்பி ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் முன்னே வருகிறான். தொழுது கொண்டிருக்கும் மனிதரிடம் 'நீ இதுவரை நினைத்திராதவற்றையெல்லாம் நினைத்துப்பார்" என்று கூறுவான். முடிவில் அம்மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராகிவிடுவார். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். மறதி ஏற்பட்டால் அமர்ந்த நிலையில் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யவேண்டும்" என்று அபூ  ஹுரைரா(ரலி) கூறினார் என அபூ ஸலமா கூறுகிறார்.

Tuesday, December 30, 2014

சபித்தல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அடியான் அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு சொல்லை நாவினால் மொழிகின்றான். ஆனால் அதில் அவன் கவனஞ் செலுத்துவதில்லை. எனினும் அந்தச் சொல்லின் காரணத்தால் அல்லாஹ் அவனது தகுதியை உயர்த்திவிடுகிறான். இவ்வாறே அடியான் இறைவனுக்குக் கோபம் உண்டாக்கக் கூடிய ஒரு சொல்லை அலட்சியமாகச் சொல்லிவிடுகிறான். அச்சொல்லே அவனை நரகில் தள்ளிவிடுகிறது”. அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி

நோயாளி பிராத்திக்க வேண்டிய துஆ

உடலில் வலி (நோய்) உள்ள இடத்தில் கையை வைத்து "பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்" என்று 3 முறை கூறி 
"அஊது பி இஸ்ஸத்தில்லாஹி வகுத்ரதிஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாஃதிர்".

ஹதீஸ்-ஆறு விஷயங்களில் தாமதிக்காதீர்...!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வதஆலா வபரக்காத்துஹூ
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் முஃமீன் ஆன ஆண் பெண் அனைவரின் மீது வற்றாது பொழியட்டுமாக.
இன்றைய தினத்தை மலர செய்த அல்லாஹ்க்கே எல்லா புகழும்.
இன்றைய தினம் இனிதாய் அமைய வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக.
1. விருந்தாளிகளுக்கு விருந்தோம்பல் செய்வதில்.!
2. இறந்தவரை அடக்கம் செய்வதில்.!
3. பெண்ணை திருமணம் செய்து வைப்பதில்.!

காமராஜரின் போராட்டங்களும் அனுபவித்த தண்டனைகளும்

விருதுநகர் மாவட்டத்தில், 1903ம் ஆண்டு பிறந்த காமராஜர் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்பிலேயே நிறுத்திக்கொண்டார். துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவர், முதல் உலகப் போரின்போது, பெரும் தலைவர்களின் பேச்சைக் கேட்டு முதன் முதலாக அரசியலில் ஈடுபட்டார்.

Monday, December 29, 2014

ஹதீஸ்-செல்வ வளம் அல்லது வாழ்நாள் அதிகரிக்க

நபி (ஸல்) கூறினார்கள் :
ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!(நூல் - புகாரி 2067)

ஹதீஸ்-கண்ணியமான ஆடை

ஒரு மூமின் தன சகோதரனுக்கு ஏற்பட்டுள்ள சோதனைக்காக ஆறுதல் கூறினால் மறுமை நாளில் அல்லாஹ் அவருக்கு கண்ணியமான ஆடையை அணிவிப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அமர் இப்ன் ஹஸ்ம் (ரலி)                                                                                   இப்னு மாஜா -1590

மொழி பற்றி காமராஜர்

மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சி மொழிப் பிரச்சினை எழுந்த போது தமது கருத்தை இவ்வாறு பதிவு செய்தார் காமராஜர்.

துஆ

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...!
யா அல்லாஹ்வே! நீ எங்களுக்கு கொடுத்தவற்றின் தீங்கிலிருந்தும், நீ எங்களுக்கு கொடுக்காதவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.

துஆ-பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு
கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

ஹதீஸ்-இறை நம்பிக்கை:

பனூஇஸ்ரவேலர்களைச் சார்ந்த ஒருவருக்குப் பணம் தேவைப்பட்டது. பலரிடம் அவர் 1000 தீனார் கடன் கேட்டுப் பார்த்தார். பலர் மறுத்துவிட, இறுதியில் அவருக்கு ஒரு மனிதர் கடன் கொடுக்க முன்வந்தார். ஆனாவ் அதற்கு சாட்சியாக ஒருவரைக் கூட்டி வரும்படி கேட்டுக் கொண்டார்.