ஊரைப்பற்றி

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தின் தெற்கில் அமையப் பெற்றுள்ள பகுதி  பேகம்பூர்.


திண்டுக்கல்லின் முகப்பு பகுதி பேகம்பூர். மதுரை, தேனி மார்க்கமாக வருகையில் முதலில் வரவேற்பது இப்பகுதிதான். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியின் பெயர் காரணத்திற்கு சரித்திர பின்னணி உள்ளது. குடிநீர் பஞ்சத்திற்கு பெயர் பெற்ற திண்டுக்கல்லின் முக்கிய அடையாளம் மலைக்கோட்டை. பெரிய திண்டு போல காணப்படும் பாறைகளால் ஆன இந்த கோட்டை பல வரலாற்று சம்பவங்களை உள்ளடக்கியுள்ளது.           
                          பழமையான வரலாறுகளை தன்னுள் புதைத்து வைத்திருக்கிற மிகப்பெரிய  பள்ளிவாசல்,   
ஹைதர் அலி திண்டுக்கல்லை ஆட்சிப் புரிந்த போது கட்டிய மூன்று பள்ளிவாசல்களில் இதுவும்  ஒன்றுஇந்த பழமையான பள்ளிவாசல் 300 வருடங்களுக்கும் முந்தையது

             பேகம்பூர் பெரிய பள்ளிவாசல்            

இந்த பள்ளிவாசலை பராமரிக்க ஹைதர் அலி நிறைய மானியங்கள் வழங்கியுள்ளார்.அவரும்,டைவீரர்களும்மக்களும் வழிபடத் தனித்தனியே மூன்று பள்ளிவாசல்களை மலைக்கோட்டையின் அருகிலேயே வெவ்வேறு இடங்களில் கட்டியுள்ளார்.
                       
                       அம்மீர்-உன்-நிஷா பேகம் அடக்கம்  செய்யப்பட்டுள்ள பகுதி

ஹைதர் அலியின் இளைய சகோதரியும் கோட்டைப் படைத்தலைவர் மிர்கா அலிகானின் மனைவியுமான அம்மீர்-உன்-நிஷா பேகம்  இறந்தபின் பெரிய பள்ளிவாசல் வளாகத்திற்குள்ளேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளார்

திண்டுக்கல்லின் ஒரு பகுதியான பேகம்பூர் ராஜவம்சப் பெண்ணின் நினைவைப் போற்றும் வகையில் இது அமைந்துள்ளது.

அவருடைய பெயரால் இந்த பகுதி பேகம்பூர் என்று அன்போடு திண்டுக்கல் பகுதியில் அழைக்கப்படுகிறது.   


அமைவிடம்                            பேகம்பூர், தமிழ்நாடு,
நாடு                            இந்தியா
மாநிலம்                            தமிழ்நாடு
மாவட்டம்                              திண்டுக்கல் 
ஆளுநர்                           கொனியேட்டிரோசையா
முதலமைச்சர்                                     ஜெ. ஜெயலலிதா
மாவட்டஆட்சியர்                           என்...வெங்கடாசலம்

கல்வி கூடங்கள்  

பள்ளிகள்
அமீருன் நிஷா  

No comments:

Post a Comment