Friday, June 8, 2018

8 விதமான சொர்க்கங்கள்

                                     அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
முதலாவது சொர்க்கம் - ஜன்னத்துல் பிர்தௌஸ்
1) போதும் என்ற மனம் கொண்டவர்கள்....
2) தினமும் பாவமன்னிப்பு (தவ்பா) தேடுபவர்கள்.
3) நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பவர்கள்.
4) பொறாமையை விட்டு நீங்கிக் கொள்பவர்கள்.
இரண்டாவது சொர்க்கம் - தாருஸ் ஸலாம்
1) அனாதைகளை ஆதரிப்பவர்கள்.
2) விதவைகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள்.
3) ஸலாம் சொல்பவர்கள்.
4) முஸ்லிமின் தேவை அறிந்து உதவி செய்பவர்கள்.

ஏழை என்பவன் யாரென்றால்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

'என்னுடைய உம்மத்தினரில் ஏழை என்பவன் யாரென்றால், ஒரு மனிதன் கியாமத்து நாளன்று தொழுகை, நோன்பு. சதக்கா போன்ற நற்செயல்களுடன் வருவான். அதேநேரத்தில் எவரையாவது திட்டி இருப்பான்; எவர் மீதாவது அவதூறு கூறியிருப்பான்; யாரையாவது அடித்திருப்பான். இந்த வழக்காளிகள் எல்லாம் அங்கு வந்து, அவனுடைய நற்செயல்களிலிருந்து அவரவர்களுக்குரிய விகிதத்தை அவனிடமிருந்து வசூல் செய்து விடுவார்கள். அவனிடமிருந்து நற்செயல்கள் அனைத்தும் தீர்ந்துவிட்ட பின் இவனால் அநீதி இழைக்கப்பட்டவர்களின் பாவங்களெல்லாம் இவன் மீது போடப்பட்டு அந்தப் பாவக்குவியல்களின் காரணமாக நரகத்திற்குச் சென்றிடுவான். இவன் தான் என் உம்மத்தில் ஏழை என்பதாக ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
தீர்மதீ,அஹமத்,அபூதாவூத்,
நன்றி ; முஹம்மது சஹா - நபிவழி நடந்தால் நரகமில்லை

இஃதிகாப் இருக்க மிகச் சிறந்த இடம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மஸ்அலா: இஃதிகாப் இருக்க ஆண்களுக்கு மிகச் சிறந்த இடம் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரமாகும். அதன் பிறகு மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயாகும். அதன் பின் பைத்துல் முகத்திஸிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா. அதன் பிறகு ஊரிலுள்ள ஜாமிஆ மஸ்ஜித். பிறகு தன் மஹல்லா மஸ்ஜித்.
நூல்: துர்ருல்மன்தூர்.
நன்றி ; முஹம்மது சஹா - நபிவழி நடந்தால் நரகமில்லை

பெண்கள் தொழுகை முறையும், தொழுகை சம்பந்தமான சந்தேகங்களும் தெளிவும்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தொழுகை ஒரு பெண்ணுக்கு எப்போது கடமையாகும்?
குழந்தைகள் ஏழு வயதானவுடன் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தொழும் படி ஏவுவதும் அதன் ஷர்த்துகளை செய்யும்படி ஏவுவதும் பிறகு பத்து வயதானவுடன் தொழா விட்டால் காயப்படாமல் அடிப்பதும் கடமையாகும். பருவமடைந்ததில் இருந்து ஒரு பெண்ணுக்கு தொழுகை கடமையாகும்.
தொழுகை யாருக்கு கடமை இல்லை?
புத்தி சுவாதீனமற்ற பெண்களுக்கும், பருவமடையாத பெண்களுக்கும் தொழுகை கடமை இல்லை. அதேபோல், மாதத் தீட்டு, பிரசவ தீட்டுள்ள பெண்களுக்கும் அவர்கள் சுத்தமாகும் வரை தொழுகை கடமை இல்லை. அதாவது, விடுப்பட்ட தொழுகைகளை பின்னர் தொழ வேண்டியதில்லை.

Wednesday, June 6, 2018

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் இறை நிராகரிப்போர் அதிகமானதால் இவ்வுலகை அழிக்க 
அல்லாஹ் நாடினான் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம்  [பேழை] அமைக்குமாறும் அப்பேழையில்[கப்பல்] இறையச்சமுடையோரையும் நபியே உம்மை நம்பியோரையும் அப்பேழையை கொண்டு காத்துக் கொள்ளவும் உதவும் என்ற அல்லாஹ்வின் கட்டளையை ஏற்ற நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் கப்பல் கட்டும் பணியை துவங்கினார் மக்கள் நபியை வினவ நபி சொன்னாங்க வெள்ளப்பிரழையம் வரப் போகுது உலகத்தை நீரைக் கொண்டு அல்லாஹ் அழிக்கப்போறான் அந்நீரில் இருந்து இது நம்மை காக்கும் பேழை என்றார் நபியை நம்பினவங்க கப்பல் கட்டும் பணியில் சேர்ந்தனர் இச்செய்தி அறிந்து ஒரு மூதாட்டி நபியிடம் வந்து நபியே பேழை உருவானதும் என்னை அழைத்து போங்க அதுவரையில் என் ஒலைகுடிலில் ஒய்வாக இருக்கிறேன் என்றார் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் யும் ஆகட்டும் தாயே நிச்சயமாக உங்களை நான் வந்து அழைத்துப் போகிறேன் என்றார்கள்
[
இன்ஷாஅல்லாஹ் சொல்லமால்]
நம்பாத கூட்டம் எள்ளி நகைத்தனர் எப்படி தெரியுமா? வெள்ளமாம் உலகம் மூடும் அளவுக்கு வருமாம் 
என பலர் நபியை பழித்தனர்

லைலத்துல் கத்ரு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!
ஹஜ்ரத் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் "லைலத்துல் கத்ரு நபியவர்களுடைய
காலத்தில் மட்டும் இருக்குமா? அதற்குப் பின்னரும் இருக்குமா?என்று கேட்டேன். 'கியாமத்து நாள் வரை இருக்கும்' என பதிலளித்தார்கள். 'அது ரமலான் மாதத்தின் எந்தப் பகுதியில் இருக்கிறது?' என்று கேட்டேன்.

Tuesday, June 5, 2018

உலகில் மாற்றம் உருவாக்கிய நூறு பேர்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!!!
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே!!!
ஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி செய்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
ஆனால், அவரது வீட்டிலோ வறுமை.
ஜகாத் (தர்மம்) பொருட்கள், அரசு கஜானாவில் வந்து குவியும்.
இல்லையென்று வருவோர்க்கு "இதோ இந்த ஒட்டகத்தை ஓட்டிச் செல்", என்று சொல்லுமளவுக்கு அரசின் நிதி நிலை அமோக வளர்ச்சியில் இருந்த காலத்திலும் கூட,

ஜனாதிபதியின் வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அடுப்பு பற்ற வைக்க இயலாத அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 2567)

Sunday, June 3, 2018

பத்ர் யுத்தம்

பத்ர் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றிலே மிகப் பிரபலமானதும், பெரிய யுத்தமும் ஆகும். இப்படியான பெரியதோர் யுத்தத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பும் போது ஸஹாபாக்களிடம் நபிகள் நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நாம் சிறிய யுத்தத்தில் இருந்து பெரிய யுத்தம் அளவில் மீண்டிருக்கிறோம்” என்று சொன்னார்கள். சஹாபாக்கள் அதிர்ச்சியுடன் நாயகமே எத்தனையோ உயிர்த் தியாகம் எவ்வளவு பெரிய யுத்தம் இதை முடித்து நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம்

தாய்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

*தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!* 
நீங்கள் அதிஸ்டசாலிகள் 

சுவர்க்கத்தின் ஒரு வாசலை நம் வீட்டிலேயே வைத்துக் கொண்டு சுவர்க்கத்திற்கு செல்லும் பாதையை நாம் வெளியில் தேடிக் கொண்டிருக்கிறோம்.