Saturday, August 5, 2017

மக்களை நேரில் சந்திக்கும் தலைவர்

1955ம் வருடம் டிசம்பர் மாதம் #காமராஜர் முதல்வராய் இருந்த காலம் தென் மாவட்டங்களில் திடீரென்று புயலும் பேய் மழையும் தாக்கின. வானம் பார்த்த சீமை எனப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் பலர் வீடிழந்தனர். தங்கள் உடமைகளை எல்லாம் இழந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தேவையில் துடித்தனர். அப்போது முதல்வர் காமராஜ் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வந்தார்.

தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ...
#தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
1.பர்ளான தொழுகைக்கு அடுத்த அந்தஸ்த்து தஹஜ்ஜுத் தொழுகைக்குத்தான்
2.கப்ரில் ஒளி கிடைக்கிறது
3.முகத்தில் ஒளி உண்டாகிறது
4.எல்லா நோய்களையும் நிவாரணமாக்குகிறது
5. இருதய நோயை விட்டுப் பாதுகாக்கின்றது.

Wednesday, August 2, 2017

காயிதே மில்லத் தமிழரா?

தேசிய அளவில் புகழ்பெற்ற தமிழர்கள் என்ற பட்டியலில் ராஜாஜி, காமராஜர் ஆகியோரைச் சேர்ப்பவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ காயிதே மில்லத் முகமது இஸ்மாயிலின் பெயரைச் சேர்க்கத் தவறிவிடுகிறார்கள். ஆனால் அந்தப் பட்டியலில் இடம்பெறுவதற்கான அத்தனைத் தகுதிகளும் கொண்டவர் காயிதே மில்லத். கண்ணியமானவர், எளிமையானவர், தேசபக்தி நிரம்பியவர், நேர்மையானவர் என்று பல அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் இந்தியாவின் அதிமுக்கிய அவைகள் அனைத்திலும் இடம்பெற்ற தமிழர் என்றால் அவர் காயிதே மில்லத் மட்டுமே. சென்னை மாகாண சட்டமன்றம், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை, மக்களவை, இந்திய அரசியல் நிர்ணய சபை ஆகிய நான்கிலும் இடம்பெற்றவர்.

வாக்குறுதி மாறுவது நயவஞ்சகத்தின் ஒரு குணம்!!!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான்.
  • பேசும்போது பொய் சொல்வதும்,
  • வாக்குறுதியளித்தால் (அதற்கு) மாறு செய்வதும்,
  • ஒப்பந்தம் செய்தால் (நம்பிக்கை) மோசடி செய்வதும்,
  • வழக்காடினால் அவமதிப்பதும் தான் அவை.

எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதைவிட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும்.
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.  (நூல் புகாரி/3178)

Tuesday, August 1, 2017

பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாது

 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)                                                                                      
                                                                            لَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّكَ لَن تَخْرِقَ الْأَرْضَ وَلَن تَبْلُغَ الْجِبَالَ طُولًا
பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்! 📚திருக்குர்ஆன் 17:37
பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாது விண்வெளிப் பயணம் போக முடியும் என்று சொல்கின்ற திருக்குர்ஆன், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்று விளைவையும் கூட சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்று (17:37) சொல்கின்றது. இவ்வசனம் மிகப் பெரிய அறிவியல் முன்னறிவிப்பாக அமைந்துள்ளது.

Monday, July 31, 2017

உம்ராவில் ஓதப்பட வேண்டியவைகள் :



நான் அல்லாஹ்விற்காக இந்த உம்ராவை நிறைவேற்றுகின்றேன் என மனதில் நிய்யத் வைத்தவராக
لَبَّيْكَ عُمْرَةً 
லெப்பைக உம்ரதன் எனக் கூறுவது. 
நிய்யத் வைத்ததன்பின் தவாபை ஆரம்பிக்கும் வரை தல்பியா கூறவேண்டும்.
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ
தல்பியா : ' லெப்பைக்கல்லாஹும்ம லெப்பைக் - லெப்பைக்க லாஷரீக்க லக லெப்பைக் - இன்னல்ஹம்த வன்னிஃமத லக வல்முல்கு லாஷரீக லக
நாயனே! உன் அழைப்பை ஏற்று வந்துவிடடேன். நாயனே! உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். நாயனே! உனக்கு நிகராக எவருமில்லை; உனக்கு இணையாக எதுவுமில்லை. உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். நிச்சயமாக புகழ், அருள், ஆட்சி அனைத்தும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.