Sunday, August 17, 2014

ஹதீஸ்-இஸ்லாம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமளானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)                                                                             நூல்: புஹாரி 8

ஹதீஸ்-நயவஞ்சகர்களுக்குப் பாரமான தொழுகை

"சுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து விடுவார்கள்.
இகாமத் சொல்லுமாறு நான் முஅத்தினுக்குக் கட்டளையிட்டு, பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுவிக்குமாறு கூறி அதன் பின்பு யாராவது தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரரா (ரலி)                                                                  நூல்: புஹாரி 657

ஹதீஸ்-ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய முடியாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய முடியாது. நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கி வைக்கின்றான். இன்னும், அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப் போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ் தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன். (எனும் 31:34ஆவது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.)
நூல்: புஹாரி 4777

ஹதீஸ்-மண்ணறை

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும் போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, 'இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என்று முஹம்மத்(ஸல்) குறித்துக் கேட்பர்.

வெந்தயம்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்:-
வெந்தயம் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவுதண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின்தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள்.
பின்வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர்குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்தநோயும் உங்களை அண்டவே அண்டாது. தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது.
ஒருதேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்து, பின்மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவைஏற்படாது. மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தபொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.
வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும். வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபிபொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவுகட்டுக்குள் இருக்கும்.

நிலவேம்பு கசாயம்

நிலவேம்பு கசாயத்தின் மருத்துவ குணங்கள்:-
இந்தியாவில் இந்த மூலிகை அதிகம் காணப்படும் ஒரு செடி வகையாகும். இது சூரத்து நிலவேம்பு, சீமை நிலவேம்பு என்று இருவகை உண்டு. இதனை சிரட்குச்சி, கிராதம், கிரியாத்து, கிராகதி, நாட்டுநிலவேம்பு, காண்டம், கோகணம் என்று பல பெயர்களால் கூறப்படுகின்றது. இதன் இலை, தண்டு, காய், வேர், பூ அனைத்தும் பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் கொண்டது. இதன் மருத்துவ குண நலன்களை பற்றி பார்ப்போம்.
குடல் பூச்சி நீங்க:
வயிற்று பூச்சிகள் உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடலின் வலிமை குறைந்து நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றோம். வயிற்று பூச்சிகள் நீங்க நிலவேம்பு நீரை நீரில் கொதிக்கவைத்து காஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேரத்தில் அருந்தி வந்தால் வயிற்று பூச்சி நீங்கும்.
உடல் வலு பெற:
உடல் வலிமையின்றி மெலிந்துகாணப்படுபவர்கள் நிலவேம்பின் பூ மற்றும் காய்களை கசாயமாக செய்து சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு வலிமை அடையும்.
மயக்கம் தீர:
சிலருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தொடர்ந்து நிலவேம்பு கஷாயத்தை அருந்தி வந்தால் சரியாகிவிடும்.
பசியை தூண்ட:
பசியால் அவதிப்படுபவர்களை காட்டிலும் பசியின்றி அவதிப்படுபவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுகள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகின்றது. இவர்கள் நிலவேம்பு பூ, மற்றும் காய் பகுதியை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதை காலையில் மட்டும் கஷாயம் செய்து குடித்துவந்தால் பசி நன்றாக ஏற்படும். அதே போன்று பித்தம் சார்ந்த வாந்தி, மயக்கம் போன்ற பல பிரச்னைகளுக்கு இந்த பாதிப்பில் இருந்து விடுபட இந்த கஷாயம் உதவுகிறது.
தலை வலி நீங்க:
அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை இரண்டு வேளையும் பருகி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறைந்து தும்மல் இருமல் போன்ற பாதிப்புகள் சரியாகும்.
குழந்தைகளுக்கு :
வயிற்று பொருமல் மற்றும் கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்பின் இலையை சாறெடுத்து கொதிக்கவைத்து ஆறவைத்து தினமும் 5 மிலி கொடுத்து வந்தால் வயிற்று பொருமல் சரியாகும்.
விஷ காய்ச்சல் குணமாக:
நிலவேம்பு 15 கிராம், கிக்சிலத் தோல் 5 கிராம், கொத்துமல்லி 5 கிராம், இவற்றை ஒன்றாக சேர்த்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து. அப்படியே மூடி ஒரு மணி நேரத் கழித்து வடிகட்டி பின்பு நான் ஒன்றுக்கு 30 மிலி என மூன்று வேளை குடித்து வந்தால் காய்ச்சல் சரியாகும்.
அஜீரணம் சரியாக:
நிலவேம்பு (பூ, காய்) காய்ந்தது 16 கிராம், வசம்புத்தூள் 4 கிராம், சதக்குப்பை விதைத்தூள் 4 கிராம், கோரைக்கிழங்கு தூள் 17 கிராம் இவற்றை ஒன்றாக சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு அதை 1 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி எடுத்து தினமும் அருந்தி வந்தால் உடல் வலு பெறும் மேலும் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.

பூவரசம் பூக்கள்

சித்த மருத்துத்தில் பூவரசம் பூக்கள் :-
பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை. பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.
சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்.