ஷஃபான் 30 நாட்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதையடுத்து, இன்று ரமழான் முதல் நாள் இரவு என்றும், ஜூன் 29ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று (நாளை) ரமழான் முதல் நாளென்றும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவித்துள்ளது.
இன்று மஃரிப் தொழுகைக்குப் பின், மாலை 06.50 மணியளவில், அப்பள்ளியின் கத்தீபும் - ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ - பள்ளியின் சார்பில் இந்த அறிவிப்பை இன்று மஃரிப் தொழுகை நிறைவுற்ற பின் முறைப்படி அறிவித்தார்.
No comments:
Post a Comment