கருப்பையை வலுவடையச்செய்யும் துரியம் பழம்
நறுமண வாசனையுடைய துரியன் பழம், மிகுந்த இனிப்பு சுவையை கொண்டுள்ளது. இந்த துரியன் பழத்தை சாப்பிட்டால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.
துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உள்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளது.
மேலும் வாழைப்பழத்தை விட 10 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. பொதுவாக கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்க முடியாது.
ஒருவேளை கருத்தரித்தாலும், சில நாட்களில் கலைந்துவிடும். எனவே இத்தகைய பிரச்சனை உள்ள பெண்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், கருப்பை பலமாகி, ஆரோக்கியமாக ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.
மேலும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவால் குழந்தையின்மை குறை இருக்கும். துரியன் பழம் அணுக்களின் எண்ணிக்கயை அதிகரிக்க வல்லது. எனவே துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.
No comments:
Post a Comment