உயர்வுக்கு ஒரு தவ்பா .
"நபியே ! நீர் சொல்லும் ! உங்கள் பாவங்களை மன்னித்து விடுபவன் . உங்களுக்கு விண்ணிலிருந்து மழை பொழியச் செய்வான்.
உங்களுக்கு பொன்னையும் , பொருளையும் , சந்ததியினரையும் அதிகமாக்கி தருவான்.
என்று சூரா நூஹ் என்னும் அத்தியாயத்தில் இந்த கருத்துபட அல்லாஹ் கூறுகிறான் .
உங்களுக்கு பொன்னையும் , பொருளையும் , சந்ததியினரையும் அதிகமாக்கி தருவான்.
என்று சூரா நூஹ் என்னும் அத்தியாயத்தில் இந்த கருத்துபட அல்லாஹ் கூறுகிறான் .
"யார் தொடர்ந்து இஸ்திக்பார் பாவமன்னிப்பு தேடுகிறாரோ , அல்லாஹ் அவரின் கஷ்ட நஷ்டங்களிருந்து விடுதலை அளிக்கிறான்."
எல்லாவிதமான கவலைகளிருந்தும் , அவருக்கு சந்தோசத்தை ஏற்படுத்துகின்றான். அவர் அறியாத நல்வழியில் , அவருக்கு பொருளுதவியை அதிகமாக்கி கொடுக்கிறான்." என்று பூமான் நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : அபூதாவூது.
நூல் : அபூதாவூது.
ஒருவர் தன் தவறை உணர்ந்து மனம் வருந்தி , தவ்பா பாவமன்னிப்பு வேண்டும் போது முஃமீனான அவருக்கு அர்ஷுடைய மலக்குகளும் விண்மீன்களும் கடலிலுள்ள மீன்களும் பாவமன்னிப்பு தேடுகின்றன எனும் போது அல்லாஹ்வின் 'மன்னிப்பு ' அவருக்கு மிக அருகில் வந்து விட்டது என்பதுதானே பொருள்.
தவ்பா பாவ மன்னிப்பின் மூலம் உயர்ந்த , 'இறைநேசர்கள் ' எண்ணிக்கைக்கு அளவே இல்லை.
தவ்பா பாவ மன்னிப்பின் மூலம் உயர்ந்த , 'இறைநேசர்கள் ' எண்ணிக்கைக்கு அளவே இல்லை.
இந்த புனித ரமலான் மாதத்தில் அல்லாஹ்விடம் அதிகமான பாவமன்னிப்பு தவ்பா செய்து இம்மை மறுமை நற்பாக்கியங்களையும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அடைவோமாக . ஆமீன்.
No comments:
Post a Comment