Tuesday, July 15, 2014

காமராஜர்

காமராஜர் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில்,
கல்விக்காக அவர் என்னென்ன சாதனைகள் செய்தார்
என்பதை ் காண்போம்.
காமராஜர் ஆட்சிக்கால்த்தில்தான் எல்லாச்
சிற்றூர்களிலும் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன.
பேரூர்களுக்கு எல்லாம் உயர்நிலைப்பள்ளிகள்
ஏற்படுத்தப்பட்டன. நாட்டுப்புறம் என்று ஒதுக்கப்பட்ட
கிராமங்களில் கூட உயர்நிலைப் பள்ளிகள் உருவாகின.
16 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் 16 லட்சம் குழந்தைகள்
படிக்கலானார்கள். அதன் பின்னர் தொடக்கப் பள்ளிகளின்
எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது. ஏறத்தாழ 48
லட்சம் பிள்ளைகள் தமிழகத்தில் கல்வி கற்கலானார்கள்.
30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் 16 லட்சம் மாணவ –
மாணவிகள் பகல் உணவு உண்டார்கள் என்று அன்றைய பள்ளிக்
கல்வி இயக்குனராக இருந்த திரு. நெ.து. சுந்தர
வடிவேலு கூறுகிறார்.
காமராஜர் முதலமைச்சராகப் பதவி ஏற்ற போது 3
இலட்சத்து 86 ஆயிரமாகயிருந்த உயர்நிலைப்பள்ளிகள்,
அவரது முயற்சிகளால் 13 லட்சமாக உயர்ந்தது. தொழிற்
கல்விக் கூடங்களும் மாவட்டம் தோறும் தொடங்கப்பட்டன.
தொழில்கள் பெருக வேண்டுமானால் தொழிற் கல்வியும்
அத்தியாவசியமன்றோ...

No comments:

Post a Comment