Tuesday, July 22, 2014

நேதாஜி

நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற போது வரவேற்பறையில் காத்திருந்த
நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார். ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .


மாவீரர் நேதாஜி அய்யா அவர்கள் ஹிட்லரை சந்திச்சப்போ எடுத்த புகைப்படம்....

ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் .
இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்ததாக கூறியிருக்கிறார்கள்
'.
இறுதியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள "ஹிட்லர் " என்றார் .


ஹிட்லருக்கு ஒரே வியப்பு...
ஹிட்லர் நேதாஜியிடம் " எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாதே? " என்று கேட்டார்.


நேதாஜி அவர்கள் "இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது" என்றராம் ...!

No comments:

Post a Comment