Sunday, July 20, 2014

இதய நோய்க்கு ஒரு கை மருந்து

இதய நோய்க்கு ஒரு கை மருந்து :
லண்டனிலிருந்து மப்டி முகமது கன்தார்வி என்பவர் பாகிஸ்தானிலுள்ள சாஹிவால் என்ற இடத்திற்கு ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த பொழுது நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆஞ்சியோ கிராபி செய்யப்பட்டது. இதயத்தில் தமனிகளில் மூன்று இடங்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு மாதத் திற்குப் பின் அறுவை சிகிச்சைக்கான நாளும் குறிக்கப்பட்டது. மருத்துவமனையிலிருந்து வெளியே வந்ததும் ஹகீம் ஒருவர் நான் ஒரு கை மருந்து சொல்கிறேன். ஒரு மாதத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி பாருங்கள் சரியாகும் என்று கூறியுள்ளார். அவரே தயாரித்து தந்துள்ளார்.ஒரு மாத்திற்கு பின் பாகிஸ்தானில் லாகூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு முன் குறிப்பிட்டிருந்த தினத்தில் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். வைப்புத்தொகையாக ரூ.2,25,000/- கட்டப்பட்டது. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் வைத்திய சோதனை நடத்திய மருவத்துவர்களுக்கு ஆச்சரியம். ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த மூன்று அடைப்புகள் எங்கே என்று வியப்பில் இருந்தனர். தொடர்ந்து அறுவை சிகிச்சைக்காக வந்தவரிடம் ஒருமாத இடைவெளியில் வேறு ஏதாவது மருந்து சாப்பிட்டீர்களா என்று கேட்டுள்ளார். இவரும் தான் சுவைத்து சாப்பிட்ட ஜூஸ் பற்றி கூறியுள்ளார். வியப்புடன் வைப்புத் தொகையை திருப்பி தந்து வாழ்த்தி அனுப்பியுள்ளனர்.
மருந்தின் சேர்மானங்களும், செய்முறையும் :
தேவையானவை -
எலுமிச்சை சாறு - 1 கப்,
இஞ்சிச்சாறு - 1 கப்,
வெள்ளைப்பூண்டுச் சாறு - 1 கப்,
ஆப்பிள் சிடார் வினிகா - 1 கப்,
தேன் - 3 கப்.
இந்த 4 பொருட்களையும் (தேனைவிடுத்து) மெதுவாக நெருப்பில் சுமார் அரைமணி நேரத்திற்கு கொதிக்க வைக்க வேண்டும். ஒரு கப் அளவு வற்றி 3 கப் அளவில் வரும்போது இறக்கி வைத்து நன்கு ஆற வைக்க வேண்டும். நன்கு ஆறியதும் அத்துடன் 3 கப் தேனை சேர்த்து சுத்தமான பாட்டிலில் சேமித்து வைக்க வேண்டும். இதனை தினமும் காலை உணவிற்கு முன் 3 தேக்கரண்டி உட்கொள்ள வேண்டும். அப்போது நரம்புகள் வழியே ஏதோ ஒரு இதமான வெப்பம் உருவாகி செல்வது போல் இருக்கிறது. உடம்பு தெம்பாக இளமையாக இருக்கிறது. விருப்பமுள்ளவர் பயன்படுத்தலாம். (தகவல் : எஸ்.பழனிச்சாமி, ஸ்பைசஸ் இந்தியா, மணம்-27, சுகம் 5, மே.2014, ஸ்பைசஸ் ரோடு, Sugandha Bhavan, P.Box. 2277, Palari Vattam P.O., Cochin - 682 025). போன்: 0484 - 2336010 - 616.இணைய முகவரி : www.indianspices.com.- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

No comments:

Post a Comment