உலகின் முதல் கப்பலையும் மிகப் பெரிய கப்பல்படையும் வைத்திருந்தவன் தமிழன்.ஆண்ட தமிழினம் அடங்கி மடிவதா ?
தென் பசிபிக் மாகடலில், ஆஸ்திரேலியா கடல் பகுதியில் ஆழக்கடல்அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குகப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் அது 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும் அக்கப்பல் தமிழர்களுடையது என்றும் தெரிவிக்கப்படுகிறது. உலகில் உள்ள கப்பல் மற்றும் கப்பல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவிய பெயர்களை காண முடிகிறது. நாவாய் மருவி நேவி (Navy) என்று ஆங்கிலத்தில் அழைக்கபெறுகிறது.
தமிழில் கடலுக்கு மட்டுமே 200க்கும் மேற்பட்ட சொற்கள் இருப்பதாக கூறப்படுகிறது. (எ-கா) அரலை, அரி, அண்மைக்கடல், அலை, அழுவம், அளக்கர், அளம், ஆர்கலி, ஆலந்தை, ஆழக்கடல், ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கரைக்கடல், காயம், கலி, கார்கொள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலதி, சலநிதி, சலராசி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நித்தம், நீந்து, நீரகம், நீரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை என கடல் என்ற சொல்லுக்கு இது போன்ற பல சொற்களை கடல் பழங்குடிகளான நம் மீனவ மக்களிடமும் நம் இலக்கியங்களிலும் அறியலாம்.
உலக கடல் அகழாய்வில் ஈடுபட்டிருக்கும் இங்கிலாந்தை சேர்ந்த கிரகாம் ஹான்காக் பூம்புகார் கடலில் ஆரய்ச்சி செய்து பூம்புகார் என்ற நகரம் கடலில் மூழ்கியுள்ளதையும், இவை 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்றும் கூறியுள்ளார். இவர் கடலில் புதையுண்ட பூம்புகாரின் அறிய ஒளிப்படங்களை வெளியிட்டுள்ளார். மற்றொரு இங்கிலாந்து அறிஞர் கிளன் மில்னே இதையே கூறுகிறார். இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைகழகம் உறுதி செய்துள்ளது.
தமிழன் உலகெங்கும் பரவி இருந்தான் என்பதற்கு பல்வேறு வரலாற்று சான்றுகளை காண முடியும். “கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களைக் கண்டுபிடித்து தொழிலையும் நாகரிகத்தையும் உலகில் முதன்முதலில் வளர்த்தது தமிழர்களே. இன்றும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 1,300 தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன” என்கிறார் கடல்சார் தமிழியல் ஆய்வாளர் திரு. ஒடிசா பாலு அவர்கள். (எ-கா) தமிழா-மியான்மர், சபா சந்தகன் – மலேசியா, கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா, கடாலன் – ஸ்பெயின், நான்மாடல், குமரி,- பசிபிக் கடல், சோழா, தமிழி பாஸ் –மெக்சிகோ, திங் வெளிர்- ஐஸ்லாந்து, கோமுட்டி-ஆப்ரிக்கா என்பவை சில உதாரணங்கள்.நண்பர்களே! நம்ம வரலாறு எத்தகையது என்று எண்ணிப்பாருங்கள்.
No comments:
Post a Comment