எலுமிச்சை பழம்...
சின்ன அளவு பழம்… இதன் பயன்கள் பெரிய அளவு...
இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் அற்புத பழம் தான் எழுமிச்சை...
இதிலுள்ள அதிகமான வைட்டமின் சி சத்தும், ரிபோஃப்ளோவினும் புண்களை ஆற்றவல்லது. எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு போட்டு தொண்டையில் படுமாறு பலமுறை கொப்பளிக்க தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும்.
* எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் மறையும்.
* தலைச்சுற்றல் வாந்தியா எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு, சிறிதளவு தேன் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட விரைவில் குணம் தெரியும்.
*எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கும் போது நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும் ஜீரணசக்தியும் அதிகரிக்கும்.
* கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக். பித்தநீர் சரியான அளவில் சுரக்க வழிசெய்கிறது. பித்தப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்க உதவுகிறது. சருமப் புண்களுக்கு ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது.
* எலுமிச்சைச் சாறை முகத்தில் தடவிவந்தால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் மறையும்.பாலாடையுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.
*தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் எலுமிச்சைச் சாறு, ஓரு டீஸ்பூன் தேனூடன் பருகி வர உடல் எடை குறையும்.
* பொட்டாசியம் அதிகமான அளவில் இருப்பதால் இதயக் குறைபாடுகளை நீக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம், தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல் போன்ற உபாதைகள் நீங்கும்.
* இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும். உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி அடையும் . மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ் நீங்கும்.
*உடலிலிருந்து நச்சுப் பொருள்களையும், பாக்டிரியாக்களையும் வெளியேற்றி மூட்டுவலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
* இரத்த சுத்திகரிப்பாக உதவுகிறது. காலரா, மலேரியா போன்ற காய்ச்சலின் போது விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப் பெரிதும் உதவுகிறது.
* சில துளிகள் எலுமிச்சைச் சாறை நீர் கலக்காமல் அப்படியே விட்டுக் கொண்டால் நாக்கின் சுவை அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை தெரியும்.
* தலையில் பொடுகுத் தொல்லை நீங்க, தலையில் எலுமிச்சைச் சாறினை தடவி சிறிது நேரம் ஊறிய பின் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும். சிறிய பழம் பயன்கள் அதிகம்.
இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் அற்புத பழம் தான் எழுமிச்சை
No comments:
Post a Comment