Wednesday, July 16, 2014

சிந்தனையில் கூட லஞ்சத்தை எதிர்பாராத காமராஜர்

இந்த தூய அப்பழுக்கற்ற தமிழன் ஆண்ட பூமி இன்று லஞ்சத்தின் உறைவிடமாய் மாறிவிட்டது. லஞ்சத்தை ஒழித்து நல்லாட்சியை கொண்டு வருவதகு தான் ஒவ்வொருவரும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த காமராஜருக்கு செய்யும் நன்றிக்கடன்.
சிந்தனையில் கூட லஞ்சத்தை எதிர்பாராத காமராஜர்
காமராஜர் முதல்வராக இருந்தப் பொழுது, அவரது அமைச்சரவையில் பங்கு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன். ஒரு முறை விருதுநகரில் இருந்த காமராஜரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார் .
அப்பொழுது அங்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார். உடனே தன்னுடைய சொந்த செலவில் ஒரு மின் விசிறியை வாங்கி வந்து, அதை இயக்குவதைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார்.
பிறகொரு சமயம் வீட்டிற்குப் போன போது மின் விசிறியைப் பார்த்துவிட்டு விசாரித்த காமராஜர், எத்தனையோ தாய்மார்கள் பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது, உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின்விசிறி ஏன் வாங்கித் தந்தார்? முதல் அமைச்சரின் அம்மா என்பதால் தானே.
இது கூட லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருதுநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார்.

No comments:

Post a Comment