தேவையான பொருட்கள்:
பயத்தம் பருப்பு [சிறுபருப்பு] – 1 கப்
தயிர்- 1/2 கப்
பச்சை மிளகாய்- 5 அல்லது 6
பூண்டு – 3 அல்லது 4 பல்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
பயத்தம் பருப்பை எடுத்து தண்ணீர் விட்டு ஐந்து முதல் ஆறு மணி நேரம் ஊறவைக்கவேண்டும். நன்கு ஊறியதும் பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றுடன் தண்ணீர் சோ்த்து மிருதுவாக அரைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். அரைத்த மாவில் உப்பு, தயிர் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். மாவை தோசை தவாவில் ஊற்றி தேசைகளை வார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான பயித்தம் பருப்பு தோசை ரெடி. தோசையுடன் தேங்காய் சட்னி சேர்த்து சூடாக பரிமாறலாம்.
குறிப்பு:
மாவில் தண்ணீர் அதிகமாக இருந்தால் ஒரு கரண்டி அரிசி மாவு சேர்த்து பயன் படுத்தலாம். மாவு ஓரளவுக்கு இலகுவாக இருக்கவேண்டும். கெட்டியாக இருந்தால் தோசை கடினமாக இருக்கும். தயிரை கடைந்த பின்பு மாவில் சேர்த்தால் கட்டி ஏற்படாது. தேவையான அளவு தயிர் மட்டு சேர்க்கவேண்டும். தயிர் சேர்த்தால் தோசை மென்மையாக இருக்கும். தயிர் அதிகமாக சேர்த்தால் புளித்துவிடும்.
மருத்துவக் குணங்கள்:
பயறு பசியைத் தூண்டி எளிதில் ஜீரணமாகக் கூடியது.
பயறு இரத்தத்தில் தெளிவை ஏற்படுத்திக் கொதிப்பைக் குறையச் செய்யும்.
பயறு இரத்தத்தில் மலம் அதிகமாகத் தங்காமல் வெளியேற்றுகிறது.
இரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை பயறு குறைய செய்கிறது.
பயறு சிறுநீரை தேவையான அளவு பெருகவும், வெளியேறவும் பயன்படுகிறது.
கபமோ, பித்தமோ அதிகமாக ஏற்படாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்க பயறு பயன்படுகிறது.

No comments:
Post a Comment