Thursday, August 14, 2014

தொழில்முனைவோர்களே

{MSME} Micro Small Medium Entrepreneur அலுவலகத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனைகளில் சில இங்கே....
அன்புள்ளம் கொண்ட தொழில்முனைவோர்களே! உங்கள் தொழில் பல்வேறுவகையான முனேற்றகளை பெற்று பெரும் பணகரர்களாக வரவேண்டும் என்பதுதான் SSI ( Small Scale Industries ) போன்ற நடுவண் அரசு நிறுவனகளின் நோக்கம். ஆனால், தொழில் வளரவேண்டும் என்று ஆசைபடுகிறீர்களே தவிர அதற்கான அரசு கட்டுமானத்தில் செல்வதை தவிர்கின்றீர்கள். இது தவறு என்கின்றனர்.
அதாவது முதலில் உங்கள் தொழிலை நீங்களே நேரில் சென்று உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் DIC துறை அல்லது MSME துறையில் பதிவு செய்தல் வேண்டும்... நீங்கள் சென்னை என்றல் கிண்டி சிப்காட் வளாகம் அருகில் உள்ள MSME அலுவகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்யுங்கள். வெறும் ரூபாய் 200/- மட்டுமே. இல்லை, எங்களுக்கு ஆடிட்டர் இருக்காரு, இடைதரகர் எங்க மச்சான்தான் என்று சென்றீர்கள் என்றல் ரூபாய் 1300 கூடுதலாக செலுத்த வேண்டும்.
இரண்டாவதாக வருமான வரி அலுவகத்தில் நேரில் சென்று ஒரே நாளில் தேவையான ஆவணங்களை தந்து PAN Permanent Account Numberயை பெறுங்கள்
மூன்றாவதாக உங்கள் தொழில் பெயரில் நடப்பு கணக்கு (current Account) நிச்சயம் தொடங்க வேண்டும். எந்த ஒரு கடன் மற்றும் உங்கள் தொழில் சமந்தமான நற்சான்றிதல் பெறவேண்டுமெனில் அதில் மிக முக்கிய பங்கு இந்த நடப்பு கணக்கு செய்கிறது.
நான்காவது சேவை வரி அலுவலகத்தில் ரூபாய் 300யை செலுத்தி உங்கள் தொழில் அலுவலக முகவரி பதிவு செய்து சான்றிதல் பெற்றுகொள்ளவும் இது உங்கள் தொழில் வளரும்போது பெரும் உதவி செய்யும்.
ஐந்தாவதாக ஒரு சிறு தணிக்கையாளரை தொடர்பு கொண்டு வருடம் தோறும் Nil கணக்கை தயார்செய்து வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்யுங்கள். இது, உங்கள் தொழில் வளரும்போது பெரும் உதவி செய்யும்....
அரசுக்கு வரிகட்ட நாம் யோசித்தால்....! நாட்டை பாதுகாக்க ஏன்?. அரசு யோசிக்காது... ஒரு நாடு எல்லா வளங்களும் பெற்று மிக பெரும் வல்லரசாக மாறவேண்டும் எனில். அனைவரும் வரியை ஒழுங்காக கட்டவேண்டும்... வரி சலுகை பெற வெவ்வேறு வழிமுறைகள் அரசு நமக்கு அளித்திருப்பின்... நாம் ஏன் வரி ஏய்ப்பு செய்யவேண்டும்.....
வரி ஏய்ப்பு தொடர்ந்தால்......நம் பேராக்குழந்தையும் புத்தகத்தில் படிக்கும் "இந்தியா ஒரு வளரும் நாடு" என்று.......

No comments:

Post a Comment