Saturday, August 16, 2014

கருணைக் கிழங்கு வடைகறி

என்னென்ன தேவை?
கருணைக் கிழங்கு - 200 கிராம்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 8 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
குழம்புக்கு:
தக்காளி, வெங்காயம் - தலா 1
பச்சை மிளகாய் - 2
தேங்காய்ப்பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கருணைக் கிழங்கைத் தோல் சீவி, துருவிக்கொள்ளவும். பொட்டுக்கலடலையை ரவை போல உடைத்துக்கொள்ளவும். துருவிய கருணைக் கிழங்கு, உடைத்த பொட்டுக்கடலை, மிளகாய்த் தூள், பெருங்காயம், பூண்டு இவற்றுடன் தேவையான உப்பு சேர்த்துப் பிசையவும். இதைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு, தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் உதிர்த்த வடைகளைச் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.
குறிப்பு: ராஜகுமாரி

No comments:

Post a Comment