1. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசனி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
2. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
3. மிளகுபொடி, சுக்குப்பொடி, தண்ணீர் போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.
4. சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் ஒரு கரண்டி இஞ்சிச் சாற்றை கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித்தொல்லை இருக்காது.
5. முள்ளங்கிக் கிழங்கின் சாறோடு மருதாணி வேரை இடித்து சேகரித்த சாற்றையும் சேர்த்து துளிகளாக காதில் விட்டுவர, குணம் தெரியும்.
6. வாழை மரத்துக் கிழங்கை இடித்து எடுத்து சாற்றை சற்று சூடாக்கி துளிகளாக காதில்விட்டால் காது வலிக்கு நல்ல பலனைத் தரும்.
7. தும்பைப்பூ, சுக்கு, காயம் இவற்றை எடுத்து நைத்து கடுகு எண்ணெயில் போட்டு காய்ச்சி காதில் சில துளிகள் விட்டால் குணமாகும்.
8. மாதுளம் பழத்தின் ரசத்தை சூடாக்கி இளம் சூடாக இருக்கும்போது சில துளிகள் காதில்விட வலி குறையும்.
9. சுக்கு, மிளகு, திப்பிலி, லவங்கப்பட்டை, சதகுப்பை, காயம், அதிவிடயம் ஆகிய சரக்குகளை சமஅளவு எடுத்து அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயையும் காடியையும் அதனுடன் சேர்த்து காய்ச்சி, அந்த எண்ணெயை காதில் சில துளிகள் விட்டு வந்தால் காது இரைச்சல் அகலும்.
10. தேவதாரு, கோஷ்டம், சிற்றாமல்லி, முன்னை, பேராமல்லி முதலியவற்றை தனித்தனியாக இடித்து நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி, ஆறவைத்து ஒவ்வொரு தைலத்திலும் ஒவ்வொரு துளி கலந்து காதிலே விட்டு பஞ்சடைத்து வந்தால், காதில் ஏற்படும் வலியுடன் ஒழுக்கு இருந்தால் குணமாகும்.
No comments:
Post a Comment