அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்....
பெண்களுக்கு ஜும்ஆ தொழுகை
பெண்கள் பள்ளிவாசல் சென்று தொழ அனுமதி கேட்டால் அவர்களின் (அந்த) உரிமைகளை நீங்கள் தடுக்க வேண்டாம் என நபி(ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: முஸ்லிம்)
பள்ளிவாசலுக்குத் தொழவரும் உங்கள் பெண்களை நீங்கள் தடை செய்யாதீர்கள். எனினும் (தொழுவதற்கு) அவர்களுடைய வீடுகளே அவர்களுக்குச் சிறந்ததாகும்
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூற்கள்: அபூதாவூத், மிஷ்காத்-1062.)
பெண்களே! ஜும்ஆ நாளன்று இமாமுடன் நீங்கள் ஜமாஅத்தில் தொழுதால் ஜும்ஆவை
(இரு ரகஅத்கள்) தொழுங்கள்! நீங்கள் உங்கள் வீடுகளில் தொழுதால் ளுஹரை நான்கு ரகஅத்துகள் தொழுங்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் எங்களுக்கு கூறுவார்கள் என அப்துல்லாஹ் இப்னு மிஃதானின் பாட்டி கூறுகிறார்கள்.
(நூல்: இப்னு அபீ ஷைபா)
பெண்கள் தாராளமாக பள்ளிவாசல் சென்று தொழலாம். இன்று அவர்களுக்கென தனி இடங்கள் ஒதுக்கப்பட்ட பள்ளிவாசல்களை உலகெங்கும் பரவலாகக் காண முடிகிறது.
No comments:
Post a Comment