Thursday, August 21, 2014

வேப்பிலையின் மருத்துவக் குணங்கள் :

வேப்பிலையின் மருத்துவக் குணங்கள் :
1. நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்குதல் (Immunomodulatory)
2. வீக்க உருக்கி (anti inflammatory)
3. ஆண்டி ஹைப்போகிளைசிமிக் (anti hypoglycemic)
4. குடல் புண்ணகற்றி (Anti-ulcer)
5. மலேரியா போக்கி (Anti malarial)
6. பூஞ்சை நோய் நீக்கி (Anti fungal)
7. பாக்டீரியா அகற்றி (Anti bacterial)
8. வைரஸ் அகற்றி (Anti viral)
9. ஆண்டி ஆக்சிடென்ட் (Anti oxidant)
10. புற்றுநோய் தடுப்பு (Anti cancerous)
வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் Azadirachtia, nimbidiol, nimbidin போன்ற வேதிப் பொருட்கள் இதுவரை பகுக்கப்பட்டுள்ளன.
வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர்.
வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.
நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு. சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள்.
வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.
வேப்பிலையை பயன்படுத்தும் முறை :
* புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும்.
* வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி, அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது.
* வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.
வேப்பிலையின் பொதுவான பயன்கள்
* வேப்பிலையை அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம்.
* சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.
* சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.
* வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
* வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும்.
* வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.

No comments:

Post a Comment