பொன்மொழிகள்...
1.வாழ்வு நெடுகக் கற்க வேண்டுமென்ற எண்ணத்தை இளைஞர்களிடம் ஏற்படுத்துவதே கல்வியின் நோக்கம். -ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்
2.சாகும் வரையிலும் ஒருவனது கல்வி நிறைவு பெறுவதில்லை. - ராபர்ட் லீ
3.கூர்த்த மதி நூறு கைகளை விடவும் வலுவானது. - தாமஸ் ஃபுல்லர்
4.மதி விதியை வெல்லும். - எமர்சன்
5.உன்னையே நீ நன்றாக எடை போட்டுப் பார்; உன் வலிமை உனக்குப் புலப்படும்.
6.வாழ்க்கை என்பது ஊக்கம்; ஊக்கம் வலிமை தரும். - ஃப்ரெடரிக் நீட்ஷே
7.பேசும் பொழுது தெரிந்ததைச் சொல்கிறீர்கள்; கேட்கும்பொழுது தெரியாததைத் தெரிந்து கொள்கிறீர்கள். - ஜேரட் ஸ்பார்க்ஸ்
8.திறமையுடன் பணிவும் கொண்டவனை மக்கள் மதிக்கிறார்கள். - ஜேம்ஸ் ஏஜீ
9.பணிவு இல்லாமல் பிற நலன்களைப் பெற்றுப் பயன் என்ன? - எராஸ்மஸ்
10.ஒருவன் உண்மையானவன் என்பதை மதிப்பிடும் அளவுகோல் அவனது பணிவு. - ரானடே
No comments:
Post a Comment