'ஆம் என்னால் எதுவும் முடியும்'
தான் எதற்கும் உபயோகமற்றவன் என்று இரவு பகலாக எண்ணிக் கொண்டிருக்கும் ஒருவனிடமிருந்து எந்த நன்மையும் பிறக்காது. 'நான் வேதனைக்குரியவன், கீழானவன், எதற்கும் பயனற்றவன்' என்று இரவும்பகலும் நினைத்துக் கொண்டிருந்தால், அவன் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாதவனாகத்தான் ஆகிறான். 'ஆம் என்னால் எதுவும் முடியும்' என்று நீங்கள் நினைத்தால் அத்தகைய ஒருவர் ஆவீர்கள். உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு எழுந்து நில்லுங்கள்.
No comments:
Post a Comment