Saturday, August 16, 2014

ஹதீஸ்-ஐனாஸா

ஒரு ஐனாஸா கொண்டு செல்லப்பட்டபொழுது அது பற்றி நன்மையாக கூறப்பட்டது. (அதற்கு) “கடமையாகி விட்டது, கடமையாகிவிட்டது, கடமையாகிவிட்டது” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(வேறு) ஒரு ஐனாஸா கொண்டு செல்லப்படும் பொழுது அது பற்றி தீமையாக பேசப்பட்டது. (அதற்கு) “கடமையாகி விட்டது, கடமையாகிவிட்டது, கடமையாகிவிட்டது” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அப்போது உமர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும். ஒரு ஐனாஸா எடுத்துச் செல்லப்பட்டு அது பற்றி நன்மையாக கூறப்பட்ட போது கடமையாகி விட்டது, கடமையாகிவிட்டது, கடமையாகிவிட்டது என மும்முறை கூறினீர்கள். ஐனாஸா கொண்டு செல்லப்படும் பொழுது அது பற்றி தீமையாக பேசப்பட்டது. கடமையாகி விட்டது, கடமையாகிவிட்டது, கடமையாகிவிட்டது என மும்முறை கூறினீர்கள். (அதன் பொருள் என்ன) எனக் கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், நீங்கள் யாரைப்பற்றி நன்மையாக கூறினீர்களோ அவருக்கு சுவனம் கடமையாகிவிட்டது. நீங்கள் யாரைப்பற்றி தீமையாக கூறினீர்களோ அவருக்கு நரகம் கடமையாகிவிட்டது. நீங்கள்தான் பூமியில் அல்லாஹ்வின் சாட்சியாளார்கள், நீங்கள்தான் பூமியில் அல்லாஹ்வின் சாட்சியாளார்கள், நீங்கள்தான் பூமியில் அல்லாஹ்வின் சாட்சியாளார்கள் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹ் அன்ஹு

No comments:

Post a Comment