திராட்சைப் பழம் எந்த வகைப் பழம்?
ஆரஞ்சுப் பழம், எலுமிச்சைப் பழம் வகையைச் சார்ந்தது திராட்சை. ஹெஸ்பிரிடியம் என்பது அதன் தாவரவியல் பழம், திராட்சையில் பல களைகள் இருப்பது தெரியவில்லை அதற்குக் காரணம் திராட்சை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால் பிரித்தெடுக்கப்பட்டு கலப்பு செய்யப்பட்டு, தோட்டப் பயிராக்கப்பட்டிருக்கிறது.
பயோமேக்ஸ் என்றால் என்ன தெரியுமா?
பூச்சிகளையே ரோபாட்டாகப் பயன்படுத்தும் முறை. கரப்பான் புச்சிகள் எல்லா இடுக்குகளிலும் புகுந்து செல்லக்கூடியன. தண்ணீர் தாகம் பார்க்காது, வெப்பம் குளிர் என்று கவலைப்படாது. எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா பிரதேசங்களில் வாழக்கூடியது.
கரப்பான் பூச்சிகளின் மீசை போன்ற உறுப்புகளின் நரம்புகடிளைத் தூண்டும் மின்முனைகளையும், அவற்றை கட்டுப்படுத்தும் தொலைத்தொடர்புக் கருவிகளையும் அதன் முதுகில் ஒட்ட வைத்துவிட்டால் பயோபாட்ரெடி.
பூகம்பத்திற்குப் பிறகு குவிந்து கிடக்கும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கிடக்கும் உயிருடைய உயிரற்ற வஸ்துக்களைப் பார்ப்பதற்கு பயோபாட்டுகள் உதவும். கரப்பான் பூச்சி தன் இஷ்டத்திற்கு ஓடிவிடாமல் தொலைத்தொடர்பு கருவி மூலம் அதை போக வைக்கலாம், போகாமல் நிறுத்தி வைக்கலாம்.
No comments:
Post a Comment