Sunday, August 31, 2014

இயற்கை மருத்துவம்,

* நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும். இதயமும் வலுவடையும். இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குணமாகும். குப்பை மேனி இலை, மஞ்சள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து உடலில் பூசி ஒரு மணிநேரம் கழித்து குளித்தால் தோல் நோய் குணமாகும்.
* நாய் கடித்தால், அந்த இடத் தில் எருக்கண் பாலை விட்டால் விஷம் முறியும். ஒரு டம்பளர் நீரில் இஞ்சி, சீரகம், கருவேப்பிலை ஆகிய மூன்றையும் போட்டு கொதித்த பின்னர், ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜூரணம் குணமாகும். ஆரஞ்ச் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ஈரல் சம்பந்தமான பிரச்னைகள் தீரும்.
* அன்னாசி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய் குணமாகும். மஞ்சள் தூள், அருகம்புல் மற்றும் சுண்ணாம்பு கலந்து நகச்சுற்று உள்ள இடத்தில் பூசி வந்தால் குணமாகும். அத்தி பழத்தை தினமும் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

No comments:

Post a Comment