Saturday, August 2, 2014

காமராஜர்

கணக்குன்னா.. கணக்குதான்...
*******************************************
காங்கிரஸ் பொன்விழா 1935, டிசம்பர் 28-ம் நாள் விருதுநகரில் காமராஜர் விருப்பப்படி நடத்தப்பட்டது. விழா முடிந்ததும் வரவு, செலவு கணக்கைச் சரிபார்த்தனர்.
வரவுக்கும் செலவுக்கும் 67 ரூபாய் 3 அணா வித்தியாசம் வந்தது.
பொருளாளர் பொறுப்பில் இருந்த தனது ஆரூயிர் நண்பர் முருக தனுஷ்கோடியிடம் காமராஜர் கணக்கு கேட்டார். எப்படியோ, செய்த செலவை எழுத மறந்து விட்டேன். என் மேல் நம்பிக்கை வைத்து வித்தியாசத் தொகையை தள்ளுபடி செய்து விடுங்கள் என்று முருக தனுஷ்கோடி வேண்டி கேட்டுக்கொண்டார்.
ஆனால் கணக்குன்னா கணக்குதான். இது நம்ம பணம் இல்லை என்று கூறி சமரசம் ஆக காமராஜர் மறுத்து விட்டார்.
பொதுப் பணத்தைப் பொறுப்பாகக் கையாள வேண்டும். அரை மணி நேரம் அவகாசம் தருகிறேன். கணக்கைச் சரியாக எழுதிக் கொடு, இல்லை என்றால் 67 ரூபாய் 3 அணாவைக் கட்டி விட வேண்டும் என்று காமராஜர் கட்டளையிட்டார்.
எதற்குச் செலவு செய்தோம் என்பதை மறந்து விட்ட தனுஷ்கோடி அந்த மறதிக்குத் தண்டனையாக கணக்கில் குறைந்த பணத்தை செலுத்தினார்.
இப்போது கூட காமராஜர் நினைவு இல்லத்திற்குச் சென்றால் மாடிக்கு செல்லும் பகுதி அருகே அவர் கைப்பட வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு தந்தது. நோட்டுப் புத்தகம் வாங்கியது என்று அணா, பைசா, விவரத்துடன் கணக்கு எழுதி வைத்திருந்ததை நாம் காணலாம்.

No comments:

Post a Comment