Thursday, August 14, 2014

பென் டிரைவில் அடிக்கடி ஏற்படும் “WRITE PROTECTED” பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி??

பென் டிரைவில் அடிக்கடி ஏற்படும் “WRITE PROTECTED” பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி??

usb-removable-disk-write-protected1பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது சில நேரம்  கீழ்க்கண்ட  பிழைச்செய்தியைக் காட்டும்.
“Cannot copy files and folders, drive is Write protected . Remove write  protection or use another disk” என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்கு வைரஸ் பிரச்சினை உட்பட பல காரணங்கள் இருக்கின்றன. இதனை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.
எளிமையான வழி:
Start – Run செல்லவும்.
பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.
reg add “HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies” /t Reg_dword /v WriteProtect /f /d 0
writeprotected
பின்னர் உங்கள் கணிணியை ரீஸ்டார்ட் செய்து விட்டு மறுபடியும் பென் டிரைவை சொருகி சரிபார்க்கவும். இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம். சரி உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்து வைக்க வேண்டும் எனில் கீழே உள்ள நிரலை மேற்கண்டவாறு Run Box இல் கொடுத்து எண்டர் தட்டவும்.
reg add “HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies” /t Reg_dword /v WriteProtect /f /d 1

No comments:

Post a Comment