மருந்தாகும் ஓமவல்லி !
கற்பூரவள்ளி என்றும் அழைக்கப்படும். வீட்டுத் தொட்டியில் வளர்க்க எட்டு மாதங்கள் ஆகும். இலை கசப்பு சுவையும் காரத்தன்மையும் கொண்டது.
இதன் இலை மற்றும் தண்டுப்பகுதி இருமல், சளி, ஜலதோஷத்துக்கு முக்கியமான மருந்து. இதன் இலையைச் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சீதள இருமல் நோய் தீரும். இலைச் சாறை நெற்றியில் பத்து போட்டால், தலைவலி நீங்கும்.
குழந்தைகளின் அஜீரண வாந்தி நீக்கும். கண் அழற்சிக்கும் உகந்தது. மனக் கோளாறை சரிசெய்யும் மருந்திலும் இந்த மூலிகை பயன்படுத்தப்படுகிறது. இலையைக்கொண்டு பஜ்ஜி சுட்டுச் சாப்பிடலாம்
No comments:
Post a Comment