Tuesday, September 9, 2014

முகப்பரு

முகப்பரு போக்க இயற்கை மருத்துவ வழிகள்
1. வெந்தயக் கீரை - 1 கைப்பிடி
துளசி இலை - சிறிதளவு
கொத்துமல்லி இலை - சிறிதளவு
எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் உள்ள பருக்கள் மீது தடவினால் முகப்பரு மாறும். கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

2. வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் பருக்கள் குறையும்.
3. வெள்ளரி - 2 துண்டு
தக்காளி - 2 துண்டு
கேரட் - 2 துண்டு
எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடங்கள் ஊறியபின் கழுவினால் பருக்கள் மறையும். ஆண்கள் இதனை உபயோகிக்கக் கூடாது.
4. எலுமிச்சையின் சாற்றினைக் கொண்டு முகப்பரு உள்ள சருமத்தில் தேய்த்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். குறிப்பாக இந்த முறையை தினமும் மேற்கொண்டால், முகப்பருவால் ஏற்படும் வலியை குணப்படுத்துவதோடு, முகப்பருவையும் போக்கலாம்.
5. வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை முகப்பரு மீது தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இல்லையெனில் வெந்தயக் கீரையை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
6. அக்காலத்தில் எல்லாம் பெண்கள் குளிக்கும் போது நீரில் சிறிது வேப்பிலையை போட்டு குளிப்பார்கள். அதனால் தான் அவர்களுக்கு சரும பிரச்சனைகள் எதுவும் வராமல் இருந்தது. ஆகவே அத்தகைய வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, தினமும் முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், நிச்சயம் முகப்பரு விரைவில் குணமாகும்.
• கற்றாழையும் பல சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. தினமும் இரண்டு முறை கற்றாழையின் ஜெல்லைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், நாளடைவில் முகப்பரு நீங்கிவிடும்.
7. வெள்ளரிக்காயை அரைத்து, அதில் சிறிது தயிர் ஊற்றி கெட்டியான பேஸ்ட் செய்து, முகம் மற்றும் முகப்பரு உள்ள இடங்களில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவினால், நல்ல பலன் கிடைக்கும்.
8. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் அசிட்டிக் தன்மை அதிகம் இருப்பதால், இதனைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், பல சரும பிரச்சனைகளைப் போக்கலாம். அதிலும் ஆரஞ்சு பழத்தின் தோலை காய வைத்து அரைத்து பொடி செய்து, தண்ணீர் ஊற்றி கலந்து, அந்த பேஸ்ட்டை முகப்பரு உள்ள இடத்தில் தடவினால், வலி நீங்குவதோடு, முகப்பருவும் மறையும்.

No comments:

Post a Comment