மாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைக்கும் கற்றாழை
பெண்கள் 3 நாள் (மாதவிடாய்) பிரச்சனையின் போது, பெண்கள் கடுமையான தசைப்பிடிப்பை வயிற்றில் அனுபவிப்பார்கள். ப்ரோஸ்டாக்ளான்டின்ஸ் என்றழைக்கப்படும் தொகுப்பு ஹார்மோன்களுடன் இருக்கும் கருப்பையின் சுவர்கள் கிழிவதால் மாதவிடாய் தசைப்பிடிப்பு வலிகள் வருகின்றன.
ப்ரோஸ்டாக்ளான்டின்ஸ்களும், வலியும் இணை பிரியாமல் ஒரே சமயத்தில் வருகின்றன. மேலும், பிரசவத்தின் போது வலியை வரவழைக்கும் பணியை செய்யும் முதன்மையான காரணியாகவும் ப்ரோஸ்டாக்ளான்டின்ஸ் உள்ளன.
இது மட்டுமல்லாமல் இரத்தம் இல்லாததாலும், தசைகள் உரசுவதாலும் கூட கருப்பையில் வலி உண்டாகும். இவ்வாறு மாதவிடாய் காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் வலியைக் குறைக்க உதவும் சில வழிமுறைகளைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்..
• கால்சியம் நிறைந்திருக்கும் ஒரு கப் பாலை உங்களுடைய காலை உணவுடன் சேர்த்துக் கொள்வதன் மூலம் வலியை எதிர்த்துப் போராடவும் மற்றும் நிவாரணம் பெறவும் முடியும். நீங்கள் பால் குடிக்க விரும்பாவிடில், மாதவிடாய் நாட்களில் கால்சியம் மாத்திரைகளை சாப்பிட்டு நிவாரணம் பெறலாம்.
• மாதவிடாய்க்கு முன்னதாக நீங்கள் சாப்பிடும் உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்ளுங்கள். பப்பாளியில் உள்ள பப்பாயின் என்ற என்ஸைம், மாதவிடாய் வலிக்கு எதிராக திறனுடன் போராடும். மாதவிடாய் நாட்களில் இரத்த ஓட்டத்தை மென்மையாகவும் மற்றும் எளிதாகவும் இந்த என்ஸைம் மாற்றி விடும்.
• உடலில் வரும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் நிவாரணியாக இருக்கும் கற்றாழை, மாதவிடாய் பிரச்சனைக்கும் மருந்து என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. கற்றாழைச் சாற்றில், ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து குடிப்பதன் மூலம் வலியில்லாத இரத்தப் போக்கை உருவாக்க முடியும்.
• மாதவிடாயின் போது காஃபிக் அமிலம் நிரம்பிய ஓமத்தை அதிகளவு சாப்பிடுவதன் மூலம், வலியிலிருந்து பெருமளவு நிவாரணம் பெற முடியும். ஓமத்தை மாசாலாக்கள் மற்றும் மூலிகை தேநீரில் கலந்து குடிப்பதன் மூலம், ஆச்சரியப்படுத்தும் விதமான நிவாரணத்தைப் பெற்றிட முடியும்.
• மாதவிடாய் நாட்களில் வலியைக் குறைக்கும் மருந்தாக இஞ்சியைப் பயன்படுத்த முடியும். அது மட்டுமல்லாமல், தவறி வரும் மாதவிடாய் சுழற்சியை வரைமுறைப்படுத்தவும் இஞ்சி உதவும். இஞ்சியை தேநீராக காய்ச்சி குடிப்பதன் மூலம் ஆச்சரியம் தரும் பலன்களை அடைய முடியும்.
No comments:
Post a Comment