Friday, September 5, 2014

இயற்கை மருத்துவம்,

சளி தொல்லை:
காயம், திப்பிலி, மாசாக்காய், அதிமதுரம், சித்திரத்தை, வாய்விளங்காய், பால் கடாச்சி, மிளகு, பூண்டு, சீனாகரம், சுக்கு. இம்மருந்துக்குப்பெயர் உரை மருந்து.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் உரலில் தேய்த்து சேர்த்து கொடுக்கவும். மாதம் ஒரு முறை கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு சளித் தொல்லை இராது.
குழந்தைகளுக்கு மார்பில் கட்டி இருப்பின் சமுத்திராபழத்தை உரலில் தேய்த்து அதை மார்பில் பூசி வந்தால் ஒரு வாரத்தில் கட்டி கரைந்து விடும்.
இரும்புச் சத்து குறைவாக இருப்பின் தினமும் கருப்பட்டி காப்பியை அருந்தி வந்தால் சீக்கிரத்தில் அளவு கூடும். குழந்தை உண்டாகி இருக்கிறவர்கள் 6, 7 மாதத்தில்இதைப் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பித்தவாயு குர்ணி:
காய்ந்த கொட்டை முந்திரி பழம், ஏலக்காய், கொத்தமல்லி விதை, இஞ்சி ஆகியவற்றை நீரில் அவித்து அந்த நீரை மூன்று நாட்களுக்குப் பருகி வந்தால் பித்த வாயு தீரும்.
நீரழிவு நோய் இருப்பவர்கள் நாவல் பழக் கொட்டையை காய வைத்து பொடி பண்ணி தினமும் சிறிதளவு எடுத்து நீரில் கலந்து பருகி வந்தால் விரைவில் குணமாகும். சுகர் ஆரம்பநிலையில் இதை கையாண்டால் குணம் கிடைக்கும்.
குழந்தைக்கு சீலம் போவதாக இருப்பின் மாதுளம்பழத்தின் பூவை எடுத்து அரைத்து ஆட்டுப் பாலில் கலந்து கொடுத்தால் சீக்கிரம் குணம் கிடைக்கும்.
வயிற்றுப் புண்:
பாசிப்பருப்பு ஒரு தேக்கரண்டி, அரிசி ஒரு தேக்கரண்டி, பூண்டு ஒரு பல், வெந்தயம் ஒரு தேக்கரண்டி, தேங்காய் பால்.
பாசிப்பருப்பு, அரிசி, பூண்டு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வேகவைத்து நன்றாக கடைந்து தேங்காய்பால், உப்பு சேர்த்து மூன்று நாள் பருகி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.
தலைசுற்றல் குணமாக:
சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவை தலா ஐந்து கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரைக் கரண்டி சாப்பிட்டு வந்தால் தலைசுற்றல் நிற்கும்.

No comments:

Post a Comment