Wednesday, September 3, 2014

இயற்கை மருத்துவம்,

* மருதாணி இலையைப் மையாக அரைத்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்க வாய்ப்புண் தீரும்.
* ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து நன்கு உலர்த்தி சூரணம் செய்து காலை,மாலை 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் படிப்படியாக குறையும். .
* நவாச்சாரத்தை முட்டையின் வெள்ளைகருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தொண்டைப்புண் தீரும்.
* அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண வர ஒற்றை தலைவலி மற்றும் தீராத தலைவலி கூட தீரும்.
* முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடிய ஆரம்பிக்கும்.
* சுரக்காய் சாறு, எலுமிச்ச பழச்சாறு கலந்து அருந்த சிறுநீரக வியாதி குணமாகும்.
* உடல் கை, கால் வலி நீங்க முருங்கை ஈர்க்கு ரசம் சாப்பிடலாம்.
* பசுந்தயிர் காச நோயைச் குணப்படுத்தும் வல்லமை உடையது.
* வாழை பூ சாறு, கடுக்காய் பொடி சேர்ந்த்து சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும்.
* மாதுளம் பழ சாற்றை புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்க்க அரிப்பு மாறும்.
* தினசரி ஆட்டுப்பால் சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோய் வருவதை தடுக்கலாம்.
* வேப்பங் கொழுந்து அது மதுர பொடி சேர்த்து அரைத்து பட்டாணி அளவு மாத்திரை செய்து 3 வேளை சாப்பிட்டு வர அம்மை நோய் தணியும்.
* ஒற்றை தலைவலி குணமாக எட்டி மரக்கொழுந்து. மிளகு பூண்டு இவைகளை நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றை தலைவலி குணமாகும்.

No comments:

Post a Comment