Thursday, September 11, 2014

வெந்தயம்

வெந்தய மருத்துவம் :-
நீரழிவு நோய்க்கு சிறிதளவு சுத்தமான வெந்தயத்தைக் காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு விழுங்கி, சிறிதளவு தண்ணீர் குடித்துவிடவும். சுமார் 21 நாட்கள் செய்தால் நீரழிவு நோய் கட்டுப்படும். 

மலச்சிக்கல் நீங்க சிறிதளவு வெந்தயத்தை இரவு படுக்கும் முன் வாயில் போட்டு மென்று தின்று தண்ணீர் பருகினால் மலச்சிக்கல் தீரும். 10 கிராம் வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைக்கவும், காலையில் அதனை மென்மையாக அரைத்துத் தலையில் தடவி கால் மணி நேரம் ஊறவைக்கவும். வாரம் 3 நாட்கள் இவ்விதம் செய்தால் கூந்தல் கருகருவென்று நீண்டு வளரும், தேகமும் குளிர்ச்சி அடையும். உஷ்ணக்கோளாறுகள் ஏற்பட்டால் இரவு சிறிது வெந்தயத்தை நீரில் ஊற வைத்து காலை நீராகாரத்தில் போட்டுக் குடித்தால் எப்பேர்பட்ட உஷ்ண சம்பந்தமான வயிற்றுவலி, வயிற்றுப்புண் ஆகியவை நீங்கும். உஷ்ணத்தால் வாய் முழுவதும் புண்கள் தோன்றும் பொழுது வாயில் வெந்தயத்தை அவ்வப்பொழுது மெல்லவும். வாயில் ஊறிய பின் கடித்து உண்ணவும். வாய்ப்புண் குறையும்.

No comments:

Post a Comment