நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம் - மருத்துவ பயன்கள்:-
கோடை காலங்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு போன்றவை பல இருந்தாலும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான். அதிலும் முக்கனிகளில் முதல் கனியான மாம்பழத்தை பார்த்ததும் அனைவருக்குமே நாவிலிருந்து எச்சில் ஊறும். மேலும் மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன.
மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும். மாம்பழத்தில் கெட்ட கொலட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் தங்கி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். ரத்தத்தை ஊறவைக்கும். மாம்பழச்சாறு நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாங்காய் அமிலத்தன்மை கொண்டது. இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும். மாங்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி, மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, வைட்டமின் குறைபாட்டால் ஏற் படும் ஸ்கேவி நோய் குணமாகும்.
மாங்காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த ரத்த பேதி நிற்கும். வயிற்று உள்ளுறுப்புக்கள் பலப்படும். மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும். மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத் துச் சாப்பிட்டால் பசி ஏற்படும். குமட்டல் நீங்கும். மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியமாகும். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால் இதனை சாப்பிட்டால் தெளிவான கண் பார்வையை பெறலாம்.
No comments:
Post a Comment