Friday, October 24, 2014

உலகின் மிக கொடிய விஷமுள்ள பூச்சி எது ?

உலகின் மிக கொடிய விஷமுள்ள பூச்சி எது ?
உலகின் மிக கொடிய விஷமுள்ள பூச்சி என்றதும் அது எங்கோ அடர்ந்த ஊசியிலைக் காடுகளிலிலோ, மலைகளிலோ இருக்கும் என்று உங்கள் எண்ணம் ஓடினால்.. உங்கள் ஊகம் தவறு ! மிக கொடிய விஷமுள்ள பூச்சியினம் உங்கள் வீட்டு கொள்ளைப்புறத்திலும் இருக்க வாய்ப்புள்ளது.
முதலில் பூச்சி என்றால் என்ன ?
6 கால்களும் 3 உடல் பாகங்களும் உடையதுதான் பூச்சி என்றழைக்கப்படுகிறது
சரி, அந்த மிக கொடிய விஷமுள்ள பூச்சி எது தெரியுமா ? எறும்பு
ஆம் எறும்பேதானாம் ! ஆனால் நம் சாதாரனமாக பார்க்கும் இந்த எறும்பு இல்லை. அதன் பெயர் ஹார்வஸ்ட் ஆண்ட் என்றழைக்கப்படும் அறுவடை எறும்பு ஆகும்.
உருவத்தோடு சதவீத அடிப்படையில் ஒப்பிடுகையில் ஒரு தேனிக்கு இருக்கும் விஷத்தை விட இவ்வகை எறும்புகளுக்கு அதிக விஷம் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்க்கிட்டு உள்ளனர்.
எறும்புகள் கடிப்பதும்,கொட்டுவதும் இரு வெவ்வேறு நடவடிக்கைகளாக இருப்பது கவனிக்கத்தக்கது. சில எறும்புகள் கடிக்கும் ஆனால் கொட்டுவதில்லை; சில எறும்புகள் கடித்து விட்டு கடித்த இடத்தில் விஷத்த பீய்ச்சியடிக்கின்றன. சில எறும்பு வகைகள் கொடுக்குகளால் கவ்விப்பிடித்துக்கொண்டு கடித்த பாகத்தில் தொடர்ச்சியாக விஷத்தை செலுத்தும் பழக்கம் கொண்டவையாக இருக்கின்றன.
சுமார் இரண்டு கிலோ எடையுள்ள ஒரு எலியை இவ்வகை எறும்புகள் பன்னிரண்டு முறை கொட்டினால் இறந்து விடுமாம்

No comments:

Post a Comment