Thursday, November 20, 2014

இஸ்லாமிய கேள்வி பதில்,

கேள்வி: நபி{ஸல்} அவர்கள் எங்கு பிறந்தார்கள்?
பதில்: நபி{ஸல்} அவர்கள் மக்கா – வில் பிறந்தார்கள்.
கேள்வி: மக்கா எங்கு இருக்கிறது?
பதில்: மக்கா அரபு நாட்டிலே இருக்கிறது.
கேள்வி: அரபு நாடு எங்கே இருக்கிறது? அதன் தனித்தன்மைகள்என்ன? பதில்:நம்முடைய நாட்டில்இருந்து வெகு தூரத்திலும் ,மேற்குத் திசையிலும் இருக்கிறது.அங்கு மனற்பாங்கான மைதானங்களும்,ஊற்றுக்களும் ,பேரித்த மற்றும் அத்திப்பழ மரங்களும் இன்னும் பல்வேறு பழ வகைகளும் நிறைந்து காணப்படுகிறது.கால்நடைகளில் ஒட்டகங்களும்,ஆடுகளும் அதிகமாக இருக்கிறது. இவைகளின் முடிகளை கம்பளி ஆடையாகவும்,தோல்களை கூடாரமாகவும் பயன்படுத்துகிறார்கள்.
கேள்வி: மக்கா, கஃபா, மஸ்ஜிதுல் ஹராம் இவைகளுக்கு மத்தியில் உள்ள வேறுபாடு என்ன?
பதில்: மக்கா என்பது ஒரு ஊரின் பெயராகும். அங்குள்ள ஒரு இடத்தில் சுமார் 12, 15 கெஜ நீள அகலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு கஃபா என்றும், அதைச் சுற்றிலும் நான்கு சுவர்களால் சூழப்பட்டுள்ள மிகப்பெரிய முற்றத்திற்கு மஸ்ஜிதுல் ஹராம் என்றும் சொல்லப்படும்.
குறிப்பு: தொழுகையின் போது இந்தக் கஃபாவைத்தான் நாம் முன்னோக்குகிறோம் என்பதும், இதை ஏழு முறைகள் சுற்றுவதற்குப் பெயர்தான் தவாப் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
கேள்வி: ஆரம்ப காலத்தில் மக்காவில் வசித்தவர்கள் யார்?
பதில்: ஹள்ரத் இப்ராஹீம்{அலை},ஹள்ரத் ஹாஜரா{அலை}, இவர்களின் மூத்த மகன் இஸ்மாயீல்{அலை} அவர்களும் பனூ ஜுர்ஹம் கோத்திரத்தைச் சார்ந்த சிலரும் வசித்தார்கள்.{ பனூ ஜுர்ஹம் கோத்திரத்தார் இங்கு வருவதற்கு முன் மக்காவின் ஓரப்பகுதியில் வசித்துக் கொண்டிருந்தார்கள்}.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَابَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا تَابَ اللَّهُ عَلَيْهِ - مسلم
''அவர்களுக்கு துன்பம் ஏற்படும்போது நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீதுதான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், கிருபை யும் உண்டாகின்றன. இன்னும் இவர்களே நேர்வழியை அடைந் தவர்கள். (அல்குர்ஆன்: 2:155, 157)

No comments:

Post a Comment