அல்குர்ஆனில் இடம் பெற்ற எளிய அழகிய துஆக்களை மறுமைக்காக மனனம் செய்வோம்.
1. எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே!
எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே!
எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக!
நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!
அல்குர்ஆன் 2:286
எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக!
நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!
அல்குர்ஆன் 2:286
2. அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் 3:26
அல்குர்ஆன் 3:26
3. எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்!!!
அல்குர்ஆன் 3:8
அல்குர்ஆன் 3:8
4. அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே! உனது அருளால் (உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!.
அல்குர்ஆன் 10:85-86
அல்குர்ஆன் 10:85-86
5. எங்கள் இறைவா !!! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக !!!
எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக !!! எங்களை மன்னிப்பாயாக !!! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 2:128
எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக !!! எங்களை மன்னிப்பாயாக !!! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 2:128
பிரார்த்தனை ஒரு வணக்கம் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். நாம் எல்லா உதவிகளையும் அல்லாஹுவிடத்திலிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். உரியமுறையில் நாம் அல்லாஹுவிடம் பிரார்த்திக்கும் போது நம் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். பிரார்த்தனை என்பது அல்லாஹ்விடத்தில் மட்டும் செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று, பிரார்த்தனையை அல்லாஹ்விடத்தில் மட்டும் கேட்க வேண்டும். அல்லாஹ்வின் படைப்புகளில் குறிப்பாக மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் பிரார்த்தனை செய்தால் அது ஷிர்க் என்னும் பெரும் குற்றமாகிவிடும். எந்த ஒரு தேவையாக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் மட்டும்தான் கேட்க வேண்டும். எனவே நமது தேவையை அல்லாஹ்விடம் முறையிட்டு கேட்டு பெறுவோம். அல்லாஹ் தரவில்லையென்றால் பொறுமை காப்போம். ஒன்று உலகில் கிடைத்துவிடும், ஒருவேளை உலகில் கிடைக்க வில்லையெனில் மறுமையில் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்
No comments:
Post a Comment