பலர் சேர்ந்து கூட்டாகத் தொழும் போது இமாமானவர் முன்னால் நின்று தொழவைப்பது போல், இருவர் மட்டும் தொழுகையில் முன்னும் பின்னுமாக நிற்கக் கூடாது, இருவரும் அருகருகே சேர்ந்து நிற்க வேண்டும். அப்படி சேர்ந்து நிற்கும் போது பின்பற்றி தொழுபவர் இமாமின் வலது பக்கத்தில் நிற்க வேண்டும்.
நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். அந்த இரவில் (உறங்கிக்கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் எழுந்து தொழுதார்கள். நானும் எழுந்து அவர்களுடன் தொழுதேன்.
அப்போது நான் அவர்களுக்கு இடப்பக்கம் நின்றேன். உடனே அவர்கள் எனது தலையைப் பிடித்து என்னைத் தம் வலப்பக்கம் நிறுத்தினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 69
No comments:
Post a Comment