ஐவேளை கடமையான தொழுகைகளையும், உபரியான சுன்னத் தொழுகைகளையும் நிறைவேற்ற வேண்டும்
1. ஐவேளைத்தொழுகை
ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் அடியார்கள் மீது கடமையாக்கியுள்ளான். அதன் கடமைகளை எளிதாகக் கருதி அதில் எதனையும் வீணாக்கி விடாமல் முறையாக நிறைவேற்றுபவரை சொர்க்கத்தில் நுழைவிக்கும் ஒப்பந்தம் அல்லாஹ்விடம் உள்ளது. அத்தொழுகைகளை யார் நிறைவேற்றவில்லையோ அவருக்கு அல்லாஹ்விடம் எந்த ஒப்பந்தமுமில்லை. அவன் நாடினால் அவருக்கு தண்டனை வழங்குவான், அவன் நாடினால் அவரை சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உபாதா இப்னு ஸாமித் - ரலி, நூற்கள் : முஅத்தா, அஹ்மத், அபூதாவூத், நஸாயீ 457, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்)
2. ஃபஜ்ர் மற்றும் அஸர் தொழுகையின் சிறப்பு
2. ஃபஜ்ர் மற்றும் அஸர் தொழுகையின் சிறப்பு
(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை தொழுகையை நிலை நிறுத்துவீராக; இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக); நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது. (17: 78)
தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். (2:238)
பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும். 11 : 114
பகலின்- இரு ஓர (ஃபஜ்ர் மற்றும் அஸர்) தொழுகைகளைத் தொழுபவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூமூஸா -ரலி, நூற்கள் : புகாரீ 540, முஸ்லிம்)
(அறிவிப்பவர் : அபூமூஸா -ரலி, நூற்கள் : புகாரீ 540, முஸ்லிம்)
3. தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய சுன்னத்தான தொழுகைகள்
ஒர் இறையடியார் கடமையல்லாத உபரியான தொழுகை 12 ரகஅத்களை தினமும் அல்லாஹ்வுக்காக தொழுவாரானால் நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டிக் கொடுக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
(அறிவிப்பவர் : உம்மு ஹபீபா -ரலி, நூல் : முஸ்லிம் 1199)
(அறிவிப்பவர் : உம்மு ஹபீபா -ரலி, நூல் : முஸ்லிம் 1199)
ஒரு நாளில் யாரேனும் -உபரியான- 12 ரகஅத்கள் தொழுதால் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீடுகட்டப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். இதனை நான் கேட்டதிலிருந்து அத்தொழுகைகளை -தொழாமல்- விடவேயில்லை என உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 1198)
ளுஹருக்கு முன்னால் 4, அதற்குபிறகு 2 ரகஅத்கள், மஃரிபுக்கு பிறகு 2 ரகஅத்கள், இஷாவுக்குப் பிறகு 2 ரகஅத்கள், ஃபஜ்ர் தொழுகைக்கு முன் 2 ரகஅத்கள் (ஆகியவை உபரியான 12 ரகஅத்களாகும்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ : 380)
4. உளுவின் சுன்னத் தொழுகை
நன்மையைப் பெற்றுத் தரும் என்ற நோக்கத்தில் இஸ்லாத்தில் நீர் செய்த நல்லறத்தை எனக்கு அறிவிப்பீராக! ஏனெனில் நிச்சயமாக நான் நேற்றிரவு -கனவில்- சொர்க்கத்தில் எனக்கு முன்னர் உமது செருப்பு சப்தத்தைக் கேட்டேன்என்று நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் ஃபஜ்ர்தொழுகையின் போது கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், எனக்கு நன்மை கிடைக்கும் என்ற நோக்கத்தில் இஸ்லாத்தில் நான் செய்த நல்லறம் யாதெனில், இரவு, பகல் எந்த நேரத்தில் நான் முறையாக உளுச் செய்தாலும் அந்த உளுவுடன் நான் எவ்வளவு தொழுவேன் என அல்லாஹ் எனக்கு எழுதிவிட்டானோ அதனைத் தொழுதுவிடுவேன் என்றார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா-ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 4497)
(அறிவிப்பவர் : அபூஹுரைரா-ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 4497)
பிலாலே! எந்தச் செயலின்காரணத்தால் சொர்க்கத்தில் என்னை விட நீர் முந்திச் சென்றுவிட்டீர்! நான் -கனவில்- எப்போது சொர்க்கத்தில் நுழைந்தாலும் எனக்கு முன்னர் உமது காலடி ஓசையைக் கேட்கின்றேன்! நேற்றிரவு -கனவில்- நான் சொர்க்கத்தில் நுழைந்த போதும் எனக்கு முன்னால் உமது காலடி சப்தத்தைக் கேட்டேன் என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், நான் பாங்கு சொன்னால் கண்டிப்;பாக இரண்டு ரகஅத்கள் தொழுதுவிடுவேன், எப்போது உளு முறிந்தாலும் உடனே உளுச் செய்துவிட்டு நிச்சயமாக அல்லாஹ்வுக்காக நான் இரண்டு ரகஅத்கள் தொழவேண்டும் என எண்ணி தொழுதுவிடுவேன் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவ்விரண்டின் காரணமாகத்தான்! (நீர் சொர்க்கத்தில் முந்தி விட்டீர்!) என்றார்கள்.
(அறிவிப்பவர் : புரைதா-ரலி, நூல் : திர்மிதீ 3622)
(அறிவிப்பவர் : புரைதா-ரலி, நூல் : திர்மிதீ 3622)
5. இறையச்சத்துடனும் மன ஈடுபாட்டுடனும் 2 ரகஅத்கள் தொழுதல்
ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளுச் செய்து, பிறகு மனதாலும் முகத்தாலும் (அல்லாஹ்வை)முன்னோக்கியவனாக இரண்டு ரகஅத்கள் தொழுவாரானால் அவருக்கு சொர்க்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உக்பா -ரலி, நூல் : முஸ்லிம் 345)
(அறிவிப்பவர் : உக்பா -ரலி, நூல் : முஸ்லிம் 345)
6.அல்லாஹ்வுக்கு அதிகமாக ஸஜ்தாச் செய்தல்
காலித் இப்னு மிஃதான் என்பவர் அறிவிக்கின்றார் :
நபி (ஸல்) அவர்களின் அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்களை சந்தித்த போது நான் அவர்களிடம், ஒரு அமலைச் செய்தால் அதன் மூலம் அல்லாஹ் என்னை சொர்க்கத்தில் நுழையச் செய்யவேண்டும், அப்படிப்பட்ட அமலை எனக்குநீங்கள் அறிவியுங்கள்! என்றோ, அல்லது அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமான அமலை அறிவியுங்கள்! என்றோ நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள்-பதிலளிக்காமல்- அமைதியாக இருந்தார்கள். நான் மீண்டும் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். நான் மூன்றாவது முறையாகக் கேட்டேன். அப்போது அவர்கள், இதைப் பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், நீ அல்லாஹ்வுக்காக அதிகமாக ஸஜ்தாச் செய்து கொள்! ஏனெனில் நிச்சயமாக நீ அல்லாஹ்வுக்காக ஸஜ்தாச் செய்வதன் மூலம் அல்லாஹ் உன்னுடைய அந்தஸ்த்தை உயர்த்துகிறான். மேலும் உன்னுடைய பாவத்தை அழிக்கின்றான் என்றார்கள். (நூல் : முஸ்லிம் 753)

ரபீஆ இப்னு கஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நான் நபி (ஸல்) அவர்களுடன் இரவு தங்கியிருந்தேன். அவர்களுக்கு உளுச் செய்யத் தண்ணீர் கொண்டுவருவது போன்ற பணிவிடைகளைச் செய்தேன்.அப்போது அவர்கள், ஏதேனும் கேள்! என்றார்கள். நான் உங்களுடன் சொர்க்கத்தில் இருக்க வேண்டும்! என்றேன். இதைத் தவிர வேறு ஏதேனும் உண்டா? என்று கேட்டார்கள். இது மட்டும்தான்! என்றேன். அப்படியானால் நீ இதனை அடைவதற்காக -அல்லாஹ்வுக்கு- அதிகமாக ஸஜ்தாச் செய்து எனக்கு உதவிசெய்! என்றார்கள். (நூல் : முஸ்லிம் 754)

7. இரவுத் தொழுகை
அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள். (32:16)
மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் வணங்கிக் கொண்டிருங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு
நியாயத் தீர்ப்பு நாளின் முதல் கேள்வி
மனிதன் ஒரே ஒரு நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளான்.
"என்னை வணங்குவதற்காகவே ஜின்களையும் மனிதரையும்
படைத்திருக்கின்றோம் " என்று அல்லாஹ் கூறுகிறான் {51:56}
மனிதர்கள் இவ்வுலகில் தன்னைப்படைத்த இறைவனை வணங்கி வாழ வேண்டும். வணக்கத்தில் மிகச் சிறந்தது தொழுகை. தீர்ப்பு
நாளில் மனிதன் தான் இவ்வுலகில் செய்த ஒவ்வொரு செயலுக்கும்
பதில் அளித்தே ஆக வேண்டும். இவ்வாழ்கையில் அவனுக்களிப்பட்ட
அருட்கொடைகளைப் பற்றி அவன் விசாரனை செய்யப்படுவான்.

பின்னர் உங்களுக்கு இறைவன் புரிந்த அருளைப்பற்றியும் அந்நாளில்
நீங்கள் கேட்கப்படுவீர்கள்.என்று குர்ஆன கூறுகிறது [102:8}. ஆனால்
கடுமையான அந்நாளில் கேட்கப்படும் முதல் கேள்வி
தொழுகையைப் பற்றியதாகும்.
நீங்கள் கேட்கப்படுவீர்கள்.என்று குர்ஆன கூறுகிறது [102:8}. ஆனால்
கடுமையான அந்நாளில் கேட்கப்படும் முதல் கேள்வி
தொழுகையைப் பற்றியதாகும்.
நியாயத் தீர்ப்பு நாளில் அவனது செயல்கள் சாட்சியாக வைக்கப்படும்போது ,முதல் நிலையாகிய தொழுகை சரியாக அமைந்திருந்தால் மறுமையின் நிலையும் சரியாக அமைந்து விடும் .தொழுகை சரியாக அமையாவிட்டால் மறுமையில் அளவற்ற கஷ்டங்களை எதிர்நோக்க நேரிடும்.
ஒரேயொரு தொழுகையை கவனக் குறைவாக விட்டாலும்
அது ஈடு செய்ய முடியாத ஒரு பெரும் பாவமாகும்.
அது ஈடு செய்ய முடியாத ஒரு பெரும் பாவமாகும்.
கடுமையான போர்க்களங்களில் கூட ஒரு முஸ்லீம் தொழுகையை
தவறவிட அனுமதி இல்லை. மாதவிடாய் சமயத்தில் மட்டும்
{பெண்களுக்கு} இதிலிருந்து சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் எவ்வளவு கடும் நோய்னால் பாதிக்கப்பட்டிந்தாலும் ,
அவர்களது உணர்வுகள் இருக்கும்வரை தொழுதே ஆக வேண்டும்.

நாம் எல்லோரும் அல்லாஹ்வை ஈமான் கொண்டு,
ஐந்து நேர தொழுகையை கடைபிடிப்போமாக!
ஐந்து நேர தொழுகையை கடைபிடிப்போமாக!
No comments:
Post a Comment