Monday, December 1, 2014

தந்தைக்கு...

* தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..! அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..
* தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..! அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்..
* தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..! அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்..!
* தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..! ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..?
* தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..! அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!
* தந்தையின் வாழ்க்கை; அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..! அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்துக் கொள்ளுங்கள்..!
"தந்தை என்பவர் அனைத்தையும் விட மிக சிறந்த முறையில் நன்மை செய்யக் கூடியவர், மிக அழகாக
பாதுகாக்க கூடியவர் ஆவார்..! அவரின் மரணத்திற்கு முன்பே.! அவருக்கு மரியாதை செய்வோம்.! அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குறை வைத்து விட வேண்டாம்.....!

No comments:

Post a Comment