என் சகோதர, சகோதரிகளே..
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
நிலவட்டுமாக..!
அகிலங்கள் யாவையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழ்
அனைத்தும்...!
அனைத்தும்...!
அன்பு நண்பர்களே ஒரு இனிய வேண்டுக்கோள் ..
நன்மையான நோன்புகள்
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (திருக்குர்ஆன் 2:183)
ஆதமுடைய சந்ததியினர் செய்யக்கூடிய எல்லா நல்லறங்களும் அவர்களுக்கே சொந்தமானது, ஆனால் நோன்பு மாத்திரம் அவர்களுக்கு சொந்தமானதல்ல. அது எனக்கே சொந்தமானது. நானே அதற்கு கூலிக்கொடுக்கிறேன். என்று அல்லாஹ் சொல்வதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்னார்கள். அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரழி) நூல் அஹ்மத், முஸ்லிம், நஸயீ
நோன்பும், குர்ஆனும், மறுமைநாளில் அடியானுக்கு பரிந்துரை செய்யகூடியவைகளாகும். நோன்பு கூறும் ‘ ”இறைவா நான் இந்த அடியானை பகல்நேரத்தில் சாப்பிடவிடாமலும், மனோஇச்சைகளின்படி நடக்கவிடாமலும் தடுத்துவைத்திருந்தேன். ஆகவே இவன் விஷயத்தில் எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக!” இன்னும் குர்ஆன் ”இறைவா இரவு நேரங்களில் இந்த அடியானை என்னை ஓதுவதற்காக இவனை தூங்கவிடாது தடுத்துவந்தேன். ஆகவே இவன் விஷயத்தில் எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக” என கூறும். அவ்விரண்டின் பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) நூல் : அஹ்மத்
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து யா ரஸுலல்லாஹ் என்னை சுவர்க்கத்திற்கு கொண்டு சேர்க்ககூடிய ஒரு நல்லறத்தை அறிவித்துத் தாருங்களேன் என வேண்டினேன். அதற்கவர்கள் நீ நோன்பு வைத்து வா ஏனெனில் நோன்புக்கு நிகர் வேறெதுவுமில்லை. என்றார்கள் பின்னர் இரண்டாம் தடவையாக அவர்களிடம் வந்து மேற்கூறிய கேள்வியையே கேட்டேன். அதற்கவர்கள் நோன்பு வைத்து வா என்றார்கள். அறிவிப்பாளர் அப்துல்லாஹ அபூஉமாமா (ரழி) நூல் அஹ்மத் நஸயீ.
அல்லாஹ்வுடைய வழியில் ஒரு நாள் நோன்பு வைப்பதினால் இறைவன் நோன்பு வைப்பவருடைய முகத்தை நரக நெருப்பிலிருந்து 70 ஆண்டுகாலம் திருப்பிவிடுவான். அறிவிப்பாளர் அபூஸயீதில் குத்ரீ (ரழி).நூல் புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா, நஸயீ அஹ்மத்
ஒவ்வொரு மாதத்திலும் பிறை 13, 14, 15 ஆகிய மூன்று தினங்கள், ஒவ்வொரு வியழன், திங்கள் ஆகிய தினங்கள் பொதுவாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு வைப்பது முஸ்தஹப்பகும்.
வாரந்தோறும் திங்கள், வியாழன் நாட்கள், மாதந்தோறும் பிறை 13,14,15 நாட்கள், ஆஷூரா நாள், ஷவ்வால் ஆறு நோன்புகள் என பல நாட்கள் நோன்பு வைக்க சிறந்த நாட்கள் என்றும் அவற்றுக்கு எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கும் என்றும் அண்ண லார் சொல்லியுள்ளார்கள். ஆனால், இந்நாட்களில் நோன்பு வைப்பதைப் பற்றி நினைத் துக்கூடப் பார்ப்பதில்லை.
No comments:
Post a Comment