அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.
மனிதன் இறந்த பின் எத்தனை காலமானாலும் அவனது உடம்பிலிருக்கும் இந்த எலும்பு [உள்வால் எலும்பு (#coccyx_bone) முதுகுத்தண்டின் வேர்ப்பகுதி] அழியாது இதை அழிக்கவும் முடியாது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த விஞ்ஞானி “ஹான்ஸ் ஸ்பீமேன்” இதை தன்னுடைய ஆய்வுக்கூடத்தில் பல ஆயிரம் டிகிரி மூலம் கரிக்கவும் மற்றும் பல அமிலங்களைக் கொண்டு கரைக்கவும் முயற்சி செய்தார் முடிவில் அவர்க்கு கிடைத்தது தோல்வியே. இந்த உலகுக்கு தன்னுடைய சோதனையின் மூலம் நிரூபித்தார்.
இதைத்தான் 1400 வருடங்களுக்கு முன்பே அல்லாஹுவின் தூதர்(ஸல்) அவர்கள் மறுமையில் மனிதனுக்கு அல்லாஹ் எவ்வாறு உயிர்க்கொடுப்பான் என்பதை பின்வரும் நபிமொழி கூறுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனின் (மனிதனின் உடலிலுள்ள) அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும்; மனிதனின் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் நுனியைத் தவிர! அதை வைத்தே அவன் (தன் தாயின் கருவறையில் முதன் முதலாக) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5661
பிறகு அல்லாஹ், வானத்திலிருந்து ஒரு நீரை இறக்குவான். உடனே இ(றந்துபோன)வர்கள் பச்சைப் புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று எழுவார்கள். மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப்போய் விடும்;
ஒரே ஒரு எலும்பைத் தவிர! அது (அவனது முதுகுத்தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும்" என்று சொன்னார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5660
Abu Huraira said, "Allah's Apostle said, 'Between the two sounds of the trumpet, there will be forty." Somebody asked Abu Huraira, "Forty days?" But he refused to reply. Then he asked, "Forty months?" He refused to reply. Then he asked, "Forty years?" Again, he refused to reply. Abu Huraira added. "Then (after this period) Allah will send water from the sky and then the dead bodies will grow like vegetation grows, There is nothing of the human body that #does_not_decay except one bone; that is the little bone at the end of the #coccyx of which the human body will be recreated on the Day of Resurrection." (See Hadith No. 338)
(Sahih Bukhari, Volume 6, Book 60, Number 457)
No comments:
Post a Comment