Monday, December 15, 2014

மரணத்தை நினைவு கூறுவோம்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
வாருங்கள் மரணத்தை நினைவு கூறுவோம்!
என்ன செய்து கொண்டு இருக்கிறாய்
வழக்கம் போல் சினிமா, தொலைக்காட்சி , மது,சூது,வீண்பேச்சு ,மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சியில் மூழ்கி கொண்டிருந்த நேரம்!
தொழுகைக்கு அழைக்கப்பட்டும் அதனை அலட்சியம் செய்து கொண்டு வியாபாரம்,facebook,நேரத்தை வீணாக கழிக்கும் கேளிக்கை கூத்துகள் மூழ்கி கொண்டிருந்த நேரம்!
இது தான் நம்முடைய இறைதூதர் அவர்கள் காட்டிய வழிமுறை (சுன்னத்) என்று தெரிந்தும் பிறருக்காக சில அற்ப விசயத்துக்காக தூக்கி எரிந்துவிட்டு இவ்வுலக வாழ்க்கைதான் நிரந்தரம் என்று மூழ்கி கொண்டிருந்த நேரம்!
எண்ணற்ற இவ்வுலக ஆசையில் அகந்தையோடு முகத்தை திருப்பிக்கொண்டு சென்ற நேரம்!
செல்வத்தை பெருக்குவதிலேயே நாட்களை கழித்த நேரம்!
இதோ உனது பெயரை கூறி அழைக்கும் அவர் வந்துவிட்டார்! மலக்குல் மௌத் வந்துவிட்டார்!
"உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், "மலக்குல் மவ்து" தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும்.(32:11)
அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்)
தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,(75:26).
"மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது.(75:27)
ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்(75:28)
இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.(75:29)
உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.(75:30)
ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை(75:31)
ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்(75:32)
பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்(75:33)
கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!(75:34)
பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.(75:35)
அவரை கண்டதும் உன்னுடைய இதயம் பயந்தால் நடுங்குகிறதா?கண்கள் மேல்நோக்கி செல்கிறதா?கால்கள் பின்னிக்கொல்கிறதா?
இப்போது என்ன செய்ய போகிறாய்?
எங்கே உனது தாய்?
எங்க உனது தந்தை?
எங்கே உனது சகோதரன்?
எங்கே உனது மனைவி?
எங்க உனது பிள்ளைகள்?
எங்கே உனது சொந்த பந்தங்கள்?
எங்கே உனது நண்பர்கள்?
எங்கே உனது ஆடாம்பர வாழ்க்கை?
எங்கே உனது செல்வங்கள்?
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.(29:57)
ஒவ்வோரு கூட்டதாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.(7:34)
மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது (அப்போது அவனிடம்) எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)(50:19)
இந்த நிகழ்வை மறந்து தானே வாழ்த்தாய்.
இதோ! வந்துவிட்டது.
இதோ! வந்துவிட்டது உனது மரணம்!
இதோ உன்னுடைய உடல் குளிப்பாட்டப்படுகிறது
இதோ கபநிடப்படுகிறது!
என்ன செய்ய போகிறாய்?
உன்னால் என்ன செய்ய முடியும்?
அதோ பார்! அது தான் உனக்காக தயார் செய்யப்பட்ட கபுர் குழி.
அது தான் நீ தனியாக தங்க போகும் வீடு.
நீண்ட நாட்களாக உனது வருகையை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறது.
உன்னை உன்னுடைய குடும்பத்தார்,நண்பர்கள், உறவினர் அனைவரும் சேர்ந்து உன்னை கபுர் குழிக்குள் வைக்க போகிறார்கள்.
மனோஇச்சைக்கு கட்டுப்பட்டு சைத்தானின் அடிச்சுவற்றை பின்பற்றி இசையில் மூழ்கி சினிமா கேளிக்கை கூத்து என்று சைத்தான் உனக்கு அழகாக காட்டினான் அதை நீ பற்றி கொண்டாய் இம்மையை விரும்பினாய் மறுமையை மறந்தாய் மமதையில் அலைந்தாய்!சைத்தானுக்கு நெருங்கிய நண்பனாகினாய்!
எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.43:36
இப்போது என்னிடமிருந்து எங்கே ஓட போகிறாய்!
இதோ உன்னுடைய கபுர் குழி தீ மூட்டப்பட்டுள்ளது
அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, "எனக்கு வஹீ வந்தது" என்று கூறுபவன்; அல்லது "அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்" என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) "உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்" (என்று கூறுவதை நீர் காண்பீர்).(6:93)
நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.(78:40)
யா அல்லாஹ் மரணத்தை மறந்து வாழ்கிறோம் யா அல்லாஹ் எங்களுக்கு யாராலும் எந்த பயனும் அளிக்க முடியாத மரணத்தை பற்றி எங்களுக்கு அதிகமாக நினைவூட்டுவாயாக!

No comments:

Post a Comment