Thursday, January 1, 2015

ஹதீஸ்-தர்மம்

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். 
தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும். தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்...?' எனக் கேட்டனர். அதற்கு நபி(ஸல்), 'ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்" என்றனர். தோழர்கள், 'அதுவும் முடியவில்லையாயின்' எனக் கேட்டதற்கு, 'தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்" என்று பதிலளித்தார்கள். தோழர்கள், 'அதுவும் இயலாவில்லையாயின்" என்றதும் 'நற்காரியத்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்!" எனக் கூறினார்கள். ஸஹீஹுல் புகாரி .1445.

No comments:

Post a Comment