உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்…..! இவர்கள் மறுமைநாளை அஞ்சியவர்களாக “காலத்தின் தேவையாகிய தஃவாவை” முன்னெடுத்து “இஸ்லாம் மீண்டும் உலகில் எழுச்சிபெற” தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்! தங்களது அமானிதம் பற்றி சிந்திக்க வேண்டும்.
உலமாக்கள் அல்லாஹ்வுக்கு மாத்திரம் அஞ்சக் கூடியவர்களாகவும் ஹக்கிற்காக போராடுபவர்களாகவும் தீனுல் இஸ்லாத்தினது பாதுகாவலர்களாகவும் திகழவேண்டும். இதுவே, இஸ்லா எழுச்சிபெற மறுமலர்ச்சிபெற இஸ்லாத்திற்கு எதிரான தீயசக்திகள் தோற்கடிக்கப்பட வழிவகுக்கும்.
நபி (ஸல்) கூறினார்கள் :
'உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள். நபிமார்கள் தீனாரையோ திர்ஹமையோ வாரிசுச் சொத்தாக விட்டுச் செல்லவில்லை. எனவே எவர் ஒருவர் அவ்வறிவைப் பெற்றுக் கொண்டாரோ அவர் முழுமையானதொரு பங்கைப் பெற்றுக் கொண்டவராவார்.'

இந்த வகையில் “சித்தீக்” எனும் உண்மையை உரைக்கம் பண்பு “அமானா” எனும் அமானிதம் பேணும் பண்பு “பதானா” எனும் புத்திகூர்மை “தப்லீக் “ எனும் பிரச்சாரம் என்ற நான்கு வகைப் பண்புகளும் நபிமார்களது பண்புகளாகும்.
இத்தகைய உண்ணதமான பண்புகளுக்குச் சொந்தக்காரர்களாக, வாரிசா எமது உலமாக்கல் இருக்கும் போதுதான் வஹியின் ஒளியில் முழுமனித சமூகதிற்குமான நேர்வழி கிடைப்பதற்கும் குர்ஆன் சுன்னாவின்படி மனித சமூகம் வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் வழிவகுக்கும்.
இத்தகைய உண்ணதமான பணியை சுமந்த உலமாக்கல் அச்சமற்றவர்களாகவும், அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடிபணிந்து நடப்பவர்களாகவும், ஹக்கிற்காக போராடுபவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் உலகில் நீதி நிலைக்கும்; மனித சமூகம் நல்வழிப்படும்.

No comments:
Post a Comment