Saturday, January 3, 2015

அலங்கார மீன் வளர்க்க மத்திய அரசு தரும் வாய்ப்புகள்

அலங்கார மீன் வளர்க்க மத்திய அரசு தரும் வாய்ப்புகள்
மீன் வளர்க்கவும், மீன் பிடிக்கவும், பதப்படுத்தி ஏற்றுமதி செய்யவும், பயிற்சி, கடனுதவி, மானியம் வழங்கி வந்த இந்திய அரசின் ""கடல் பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்'' இன்று அலங்கார மீன் வளர்க்கவும் மார்க்கெட் செய்யவும் ஏராளமான உதவிகள் செய்து வருகிறது.

அலங்கார மீன் வளர்ப்பில் கிராமப்புறங்களில் ஏராளமான வேலை வாய்ப்புக்களை உருவாக்குகிறது. அலங்கார மீன் வளர்ப்போர், மார்க்கெட்டிங் கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டிடம், இதர பொருட்கள் வாங்க நிதி உதவி. உற்பத்தி, மார்க்கெட்டிங் மற்றும் ஏற்றுமதிக்கு உதவுதல் ஆகிய பணிகளை செய்கிறது.
வருடத்திற்கு 60000 மீன் உற்பத்தி செய்வோருக்கு ரூ.75000, 1,60,000 மீன் உற்பத்தி செய்வோருக்கு ரூ.2 லட்சம் மற்றும் வருடத்திற்கு 5 லட்சம் மீன் உற்பத்தி செய்வோருக்கு ரூ.7.5 லட்சம், கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.5 லட்சமும் நிதி உதவி அளிக்கப்படும்.
சிமென்ட், தண்ணீர் தொட்டி, கண்ணாடித்தொட்டி, தண்ணீர் சுத்தம் செய்யும் கருவிகள் போன்றவற்றுக்கு வழங்கப்படும். தமிழ்நாடு அரசிடம் பதிவு பெற்ற ""அலங்கார மீன் வளர்ப்போர் கூட்டுறவு சங்கங்களுக்கு'' ஏற்றுமதி செய்ய, மார்க்கெட் செய்ய நிதி உதவி வழங்கப்படும். ஆனால் இண்டர்நேஷனல் விமான நிலையத்தில் இருந்து 30 கி.மீ தொலைவுக்குள் ஏற்றுமதியாளர் இருக்க வேண்டும்.
இத்திட்டம் பற்றியும், இந்திய அரசு கடல் பொருள்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க கொண்டு வந்துள்ள அனைத்து திட்டங்களையும் பற்றி அறிந்து கொள்ள
உதவி இயக்குநர் (அலங்கார மீன் வளர்ச்சித் துறை) கடல் பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம், House, Panampally Avenue, Kochi - 682 036, Kerrala. Ph: 0484 231 197. email: mpeda@mpeda.nic.in., www.mpeda.com.
கிளை : துணை இயக்குநர், MPEDA, AH25, 4வது தெரு, 8வது மெயின் ரோடு, சாந்தி காலனி, அண்ணா நகர், சென்னை40. போன்: 044 262 69192. email : chempeda.vsnl.net.

No comments:

Post a Comment