இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
அல்லாஹ் தன்னுடைய (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்,
1. நீதிமிக்க ஆட்சியாளர்.
2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.
3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில்) கண்ணீர் சிந்திய மனிதன்.
4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.
5. இறைவழியில் நட்புகொண்ட இருவர்.
6. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்“ என்று கூறியவர்.
7. தம் இடக் கரம் செய்த தர்மத்தை வலக் கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 6806
No comments:
Post a Comment