Thursday, February 12, 2015

பொது அறிவு தகவல் துணுக்குகள் ....!

* மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.
* கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்டநிலையில் வாழ இயலும்
* பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும்
* ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும்
* பட்டாம்பூச்சிகள் அதன் கால்களை கொண்டுதான் உணவை ருசிக்கின்றது
* உலகளவில் பெரும்பான்மையாகவிலங்குகளால் ஏற்படும் மரணங்களை ஏற்படுத்துவது கொசு.
*எறும்புகள் தூங்குவதே இல்லை
* பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்
* பனிக்கரடிகள் அனைத்தும் இடது கை வழக்கமுடையவை
* முதலைகளால் நாக்கினை வெளியே நீட்ட இயலாது.
* பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அதிகம்.
* சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது.
* ஆப்பிரிக்க யானைகளுக்கு உணவை மெல்ல இருக்கும் பற்களின் எண்ணிக்கை நான்கே நான்குதான்.
* மிகவும் சிறிய இருதயம் கொண்ட மிருகம் சிங்கம்.
* பாம்புகளுக்கு ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.
* ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன.
*கட்டுல் என்ற வகை மீனுக்கு மூன்று இதயங்கள் உண்டு.
* மின்னல் தாக்கி இறந்து போன மிருகங்களை மற்ற மிருகங்கள் உண்ணாது.
* முள்ளம் பன்றி எலி இனத்தைச் சேர்ந்தது.
* இறால் மீனுக்கு இருதயம் அதன் தலையில் உள்ளது.
* கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி கிடையாது.
* நம்மால் இரண்டு கண்களிலும் ஒரே காட்சியைத்தான் காண முடியும். ஆனால் ஓணான்களால் இரண்டு கண்ணில் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் காண முடியும்.
* வெட்டுக்கிளிக்கு காதுகள் காலில் உள்ளன.
* நண்டுகளுக்குப் பற்கள் வயிற்றில் உள்ளன.
* உலகில் எல்லாப் பிராணிகளும் முன் பக்கமாகவே நடக்கும். ஆனால் நண்டு மட்டுமே பக்கவாட்டில் நடக்கக் கூடியது.
* உல‌கி‌ல் ‌கி‌ட்ட‌த்த‌ட்டஇருபதா‌யிர‌ம் வகை ப‌ட்டா‌ம்பூ‌ச்‌சிக‌ள் உள்ளன.

No comments:

Post a Comment